அல்ஜீரிய நாட்டின் விமான நிறுவனமான ஏர் அல்ஜிரி நடுவானில் திடீரென மாயமானதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா ஃபோசாவின் தலைநகர் அவாகடோகு நகரில்
இருந்து ஏர் அல்ஜிரி விமானம் ஒன்று அல்ஜீரிய நாட்டின் அல்ஜியர்ஸ் நகருக்கு
110 பயணிகளுடன் கிளம்பியது. அந்த விமானம் கிளம்பிய 50வது நிமிடத்திற்கு
பிறகு அல்ஜீரியாவின் தரை கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு
துண்டிக்கப்பட்டுவிட்டது.
இதனால் விமானத்தை தேடும் பணியில் அல்ஜீரிய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த வாரம் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு அதே ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது.

இதுவரை அதை கண்டு புடிக்க முடியவில்லை. இந்நிலையில் அல்ஜீரிய விமானம் திடீரென மாயமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments