இளம் யுவதிகள் 20 ஆடுகள் மற்றும் 3 ஒட்டகங்களைப் பெற்று ஆண்களுக்கு திருமணத்துக்காக விற்கப்படும் நடைமுறை கென்யாவிலுள்ள பின்தங்கிய சமூகங்களில் தற்போதும் பின்பற்றப்படுவது தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
யுவதிகள் வயதுக்கு வந்துள்ளதை குறிக்கும் பாரம்பரிய வைபவத்தின் ஒரு அங்கமாக அவர்களை அவர்களது எதிர்கால கணவர்மாருக்கு விற்கும் நிகழ்வு இடம்பெறுகிறது.
மேற்படி யுவதிகளில் அநேகர் பொகொட் இனத்துவ குழுவைச் சேர்ந்தவர்களாவர்.
மரிகட் நகரிலிருந்து 30 மைல் தொலைவிலுள்ள வனப் பிராந்தியத்தில் இந்த இனத்துவ குழுவினர் வாழ்கின்றனர்.
மேற்படி இனத்துவ குழுவைச் சேர்ந்த வயதுக்கு வரும் யுவதிகள் ஒரு மாத காலத்துக்கு தனிமைப்படுத்தப்பட்டு வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
அந்த யுவதிகளுக்கான திருமண ஏற்பாடு அவர்களது பெற்றோரால் அவர்களுக்குத் தெரியாமல் மறைக்கப்படுவது வழமையாகவுள்ளது. திருமண ஏற்பாட்டை அறிந்தால் தமது மகள்மார் தப்பிச்செல்ல முயற்சிக்கலாம் என்ற அச்சமே அதற்குக் காரணமாகும்.
திருமண வைபவத்திற்கு முதல் நாள் கிராம ஆண்களால் தெரிவு செய்யப்பட்ட காளை மாடொன்றை யுவதிகள் தமது கை முஷ்டியால் குத்திய பின் அந்த மாட்டை ஈட்டியால் குத்திக் கொல்லும் சடங்கு இடம்பெறும்.
தமது தந்தைமாரால் மணமகன்மாருக்கு விற்கப்படும் சில யுவதிகள் திருமணத்துக்கு மறுப்புத் தெரிவிக்கின்ற நிலைமையும் அங்கு நிலவுகிறது. இவ்வாறு மறுக்கும் யுவதிகள் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டு திருமணம் செய்துவைக்கப்படுகின்றனர்.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice
No comments:
Post a Comment