தஞ்சையில் ஒரே நேரத்தில் 4 ஆயிரம் மாணவ, மாணவிகள் காகித தலைப்பாகை அணிந்து புதிய கின்னஸ் சாதனை



தஞ்சையில் ஒரே நேரத்தில் 4 ஆயிரம் மாணவ, மாணவிகள் காகித தலைப்பாகை அணிந்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். தஞ்சையில் யாகப்பா நகரிலுள்ள தனியார் பள்ளியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. கடந்த ஆண்டு ஐனவரி 1-ம் தேதி நியுசிலாந்து நாட்டில் 3 ஆயிரத்து 45  மாணவிகள் தலைப்பாகை அணிந்து நிகழ்த்திய சாதனையாக இருந்தது. தற்போது இந்த சாதனை தஞ்சையில் முறியடிக்கப்பட்டுள்ளது. 

தூய்மை இந்தியா திட்டத்தை முன்னிறுத்தியும், பழைய காகிதங்களை மறுசூழற்சிக்கு பயன்படுத்த வலியுறுத்தியும் இந்த கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.-DINAKARAN-

Post a Comment

0 Comments