ஜனாதிபதியின் விளம்பரத்துக்காக கடத்தப்பட்ட சிறுவன்.

ரூபவாஹினியில் ஒளிபரப்பப்பட்ட காணொளியொன்றில் தோன்றி தனது தாயாரை பொது வேட்பாளர் சிறை பிடித்து வைத்திருப்பதாகவும் அவரை விடுதலை செய்யும்படியும் கோரிய சிறுவன் உண்மையில் அவனது பாதுகாவலர்களான தாய் மற்றும் பாட்டியின் அனுமதியின்றி கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பை
ஆதாரங்காட்டி தகவல் வெளியிட்டுள்ளார் வழக்கறிஞர் சாலிய பீரிஸ்.
பொலிஸ் தரப்பே குறித்த தகவலை நீதிமன்றில் தெரிவித்ததாகவும் கூறியுள்ள அவர், சிறுவனுக்கு உடல் மற்றும் உளரீதியான உளைச்சல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் சமிளா குமாரி திசாநாயக்க எனும் குறித்த சிறுவனின் தாயார் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரிக்கப்பட்ட வழக்கில் கடத்தியதாகக் கூறப்படும் சிறுவனின் தந்தையைக் கைது செய்யும் படி உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் மேலதிக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தனது மகன் கடத்தப்பட்டு அரசியல் விளம்பரத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக தாயார் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments