தலைநிமிர்ந்து நடக்காத ஸ்மார்ட்போன் அடிமைகளுக்கு தனிப்பாதை அமைத்துக் கொடுத்த பல்கலைக்கழகம்...உலகளவில் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், எந்த சக்தியாலும் அவர்களை மாற்ற முடியாது என்பதை புரிந்து கொண்ட பல்கலைக்கழகம் ஒன்று அவர்களுக்காக தனிப் பாதை ஒன்றை அமைத்துத் தந்துள்ளது.

அமெரிக்காவின் உதா மாநிலத்தில் உள்ள உதா வேலி பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிப்போன மாணவர்களால் பேராசிரியர்களும் சக மாணவர்களும் கடும் எரிச்சலடைந்தனர். காரணம் வகுப்புக்கு நேரமாச்சு என்று அவசர அவசரமாக மாணவர்கள் ஓடும் போதுதான்... அவர்களுக்கு முன்பாக ஸ்மார்ட்போனில் மெசேஜ் அனுப்பியபடி ஆமையை விட குறைவான வேகத்தில் ஒருவர் சென்று கொண்டிருப்பார்.

இதற்கு ஒரு முடிவு கட்ட நினைத்த பல்கலைக்கழக நிர்வாகம், மாடிப்படிகளை வாக், ரன், டெக்ஸ்ட் என்று மூன்று பாகமாக பிரித்துள்ளது. நடந்து செல்பவர்கள் இடது பக்கமும், ஓடுபவர்கள் நடுவிலும், அசமந்தமாக செல்லும் ஸ்மார்ட் போன் அடிமைகள் வலது பக்கமாகவும் செல்லும் படி பாதை அமைத்துக் கொடுத்துள்ளது. 

இந்த புகைப்படம் லோக்கல், நேஷனல், இண்டர்நேஷனல் என்று பட்டி தொட்டியெங்கும் வைரலாக, எங்கள் பல்கலைக்கழகத்திலும் இதை அமல்படுத்த வேண்டும் என்று மாணவர்கள் போராட்டம் செய்வார்களோ!!! என்று பல நாட்டு பல்கலைக்கழகங்கள் அச்சத்தில் உறைந்துள்ளன.

Post a Comment

0 Comments