நோன்பு வைக்கும் நிய்யத்தில் "நாளை வைக்க நிய்யத் செய்கிறேன்."என்று சொல்லப்படுகிறதே! இன்று என்று தானே சொல்லவேண்டும்?!..ஐயம்:-

நோன்பு வைக்கும் நிய்யத்தில் "நாளை வைக்க நிய்யத் செய்கிறேன்."என்று சொல்லப்படுகிறதே! இன்று என்று தானே சொல்லவேண்டும்?!...

தெளிவு:-

மார்க்க அறிஞர்கள் நோன்பின் நிய்யத்தை விளக்கும்போது "ஸவ்ம ஙதின்" என்று நிய்யத் வைக்கவேண்டும் என்றே கூறியுள்ளனர்.

இதில் ஙதின் என்ற வார்த்தைக்கு அடுத்து வரும் பகல் என்று பொருள்!
நோன்பை இரவில் நிய்யத் செய்யப்படுவதால் அடுத்த பகல் நோன்பிருப்பதாக நிய்யத் செய்யப்படுகிறது.

இதனை தமிழ்ப்படுத்திய ஆலிம் பெருந்தகைகள் "நாளை" என்று தமிழ்ப்படுத்தியுள்ளனர்.

தமிழில் நாளை என்றால் பகலில் என்று பொருள்!

ஆக நாளை என்று சொல்லி நிய்யத் வைத்து நோன்பு வைப்பதின் மூலமும் நோன்பு நிய்யத் கூடி நோன்பு உண்டாகி விடும்.

(மஹ்கமே ஷரயிய்யா)

-Vkalathur-

Post a Comment

0 Comments