கற்பிட்டியின் குரல் முகநூல் பக்கம் இன்று 23 + வாசகர்களினால் Like செய்யப்பட்டு நாளாந்தம் வளர்ந்துகொண்டிருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்.
கற்பிட்டியின் குரல் வலைத்தளம் (Website) 2013 அக்டோபர் 29 ஆம் திகதி திறக்கப்பட்டது. இன்று வரை 8 மில்லியன் முறை வாசகர்களினால் திறந்து பார்வையிடப்பட்டுள்ளது. இவ் வலைத்தளத்தின் வேகமான வளர்ச்சிக்காக எதுவித பணக் கொடுப்பனவும் இன்றி பணியாற்றும் ஊகவியலாளர்களையும் செய்தியாளர்களையும் எழுத்தாளர்களையும் நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்.
ஒரு சமூக ஊடகத்தின் வளர்ச்சி அதன் உள்ளடக்கம், வாசகர்கள், நிருவாகம் ஆகிய அனைத்திலும் தங்கியுள்ளது. கற்பிட்டியின் குரலை பொறுத்தவரை அதன் அனைத்து அங்கங்களையும் ஆரோக்கியமான நிலையில் வைத்துக்கொள்வதில் வாசகர் மற்றும் அங்கத்தவர்களின் ஒத்துழைப்பும் முகநூல் பக்கம் மற்றும் வலைத்தள வாசகர்களின் ஆர்வமூட்டலும் இன்றியமையாத காரணிகள் ஆகும்.
கற்பிட்டியின் குரலானது சமூகப் பங்களிப்பில் இன்னும் விதை பருவத்தில் உள்ளது என்றே கூறுவோம். இந்த விதை ஒரு பயிராகி நாளை நிழல் தரும் மரமாகும் வரை கற்பிட்டியின் குரலோடு நீங்கள் அனைவரும் இணைந்திருக்க வேண்டும் என அன்பு வேண்டுகோள் விடுக்கின்றோம்.
உங்கள் ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் நாடும்
நிருவாகம்
KalpitiyaVoice
ஊடக பண்பாட்டுடன் சமூக ஊடகங்கள் சந்திக்கும் மையம்.
ஊடக பண்பாட்டுடன் சமூக ஊடகங்கள் சந்திக்கும் மையம்.
0 Comments