இணையத்தள மற்றும் கையடக்கத் தொலைபேசி பாவனையும் பிரச்சினைகளுள் ஒழுக்கம் பேனப்படுமா? - KALPITIYA VOICE - THE TRUTH

Sunday, October 11, 2015

இணையத்தள மற்றும் கையடக்கத் தொலைபேசி பாவனையும் பிரச்சினைகளுள் ஒழுக்கம் பேனப்படுமா?

சமூகப் பிரச்சினைகள் பல்வேறு வடிவங்களில் சமூகத்திற்குள் ஊடுருவி சமூகத்தை நிலைகுலைச் செய்கிறது. அந்தவகையில் நமது சமூதாயங்களின் மத்தியில் போதைப் பொருள் பாவனை, தற்கொலை, கருக்கலைப்பு, சிறுவர், பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம், வீட்டுவன்முறை, விவாகரத்து, வறுமை, பாடசாலை மாணவர் இடைவிலகல,; சுற்றாடல் மாசடைதல், யானை – மனித மோதல், எனத் தொடரும் சமூகப் பிரச்சினைகளில் சமூக இணையத்தள மற்றும் கையடக்கத் தொலைபேசி பாவனையும் பிரச்சினைகளுக்குள் பலரைத் தள்ளிக்கொண்டிருக்கிறது.

ஊடகங்;களின் தேவையும் அதன் பயன்பாடும் இன்றியமையாத ஒன்றாக அமைகின்றபோதிலும், அவை முறை தவறிப் பயன்படுத்தப்படும்போது அதுவே பலரை பல சிக்கல்களுக்குள் சிக்க வைப்பதுடன்; பலரின் உயிருக்கு உலையாகவும் மாறிவிடுவதை நாட்டில் நடந்தேறி மற்றும் இடம்பெறும் சம்பவங்கள் ஆதாரமாகவுள்ளன.

பத்திரிகை, வானொலி தொலைக்காட்சி என்ற வரியில் கையடக்கத் தொலைபேசி சமூக வலைத்தளங்கள் என ஊடகங்கள்pன் பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது. எதிர்காலத்தில் எவ்வகையான ஊடகங்கள் வரவுள்ளன என்பதை பொறுத்திருந்தூன் பார்க்க வேண்டும்.

ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொரு முக்கிய தேவையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட போதிலும், அவை சமகாலத்தில் தேவையையும் நோக்கத்தையும் மீறிப் பயன்படுத்தப்படுவதால்; ஆபத்துக்களை உருவாக்கும் சாதனங்களாக மாறிவிட்டனவா எனக் கேட்கத் தோன்றுகிறது.


குறிப்பாக, சமகாலத்தில் குடும்பப் பிரச்சினைகளுக்கும் பல சமூக சீரழிவுகளுக்கும் முக்கிய காரணியாக இந்த முறை தவறிய சமூக இணையத்தளப் பாவனை, கையடக்கத் தொலைபேசிப் பாவனை என்பன தொடர்பில் வெளிவருகின்ற செய்திகள் மூலாதாரமாகவுள்ளதை அறிய முடிகிறது. 

இலங்கையில் கையடக்கத் தொலைபேசி


இலங்கiயின் மொத்த சனத்தொகையை விட கையடக்கத் தொலைபேசி இணைப்பைப் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடுமோ என்ற அச்சம் கொள்ளும் அளவிற்கு கையடக்கத் தொலைபேசிப் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இலங்கையின் மொத்த சனத்தொகை இரண்டு கோடியைத் தாண்டியுள்ள நிலையில் கைடயக்தொலைத் தொலைபேசி இணைப்பைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதைவிடக் கடந்துவிடும் என்ற நிலை காணப்படுகிறது.

அதிலும் ளுஅயசவ Phழநெக்கான மோகம் அதிகரித்துவிட்டது ஒவ்வொருவரும் இரண்டு அல்லது மூன்று போன்களைப் பாவிப்பதை சர்வ சாதாரமாகப் காண முடிகிறது. இத்தோடு ஐந்து கைடயக்கத் தொலைபேசி இணைப்பை வழங்கும் நிறுவனங்கள் இருந்தால் ஒவ்வொரு நிறுவனத்தினூடாகவும் வழங்கப்படுகின்ற இணைப்புக்களைப் பெறுகின்றனவர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு கையடத் தொலைபேசியிலும் அதன் பாவனையிலும் பித்துப் பிடித்தவர்கள் போன்று அவற்றுடன் வாழ்நாள் நேரங்களை வீண் விரையம் செய்துகொண்டிருக்கிறார்கள். இலங்கையில் சாரசரியாக கையடக்கப் தொலைபேசிப் பாவனைக்காக நாளொன்றுக்கு 4 – 6 மணித்தியாலங்கள்; செலவு செய்யப்படுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

இவ்வாறு நேரத்தையும் காலத்தையும் விரையம் செய்கின்றவர்கள் தேவையான விடயங்களுக்கு அதனைப் பயன்படுத்தாது தேவையற்ற பொழுதுபோக்குக்காக தொலைபேசிப் பாவனை ஒழுங்கு முறை தெரியாமல், அவற்றை அறிந்துகொள்ளாமால் பயன்படுத்துவதன் மூலம் அவமானத்திற்கும் ஆபத்துக்கும் உள்ளாகிறார்கள் என்பதை அண்மைக் காலங்களில் இலங்கையில் நடைபெற்ற சம்வங்கள் புடம்போட்டுக் காட்டுகின்றன.

நாகரிகமான அழைப்புக்களும் நாமும்

ஒவ்வொருவரினதும் கரங்களை விட்டு அசையாது அப்பிக்கொண்டிருக்கும் இந்த கையடக்கத் தொலைபேசி எவ்வாறு பிறகுக்கு தொல்லை வழங்காத தொலைபேசியாகப் பாவிக்க முடியும் என்பது பற்றி பலருக்கு இன்னுமே தெரியாமல் இருப்பதாக சமூக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


பொதுவாக எந்தவொரு மதமும் பிறருக்குத் தொல்லை கொடுப்பதை அனுமதிக்கவுல்லை ஊக்கப்படுத்தவுமில்லை. அவ்வாறான நிலையில் கையடக்கத் தொலைபேசி மூலமாக தொல்லை கொடுப்பது விரும்பத்தகாததும் தடுக்கப்பட வேண்டிதொன்றாகும். நாம் எந்தவேளைப் பழுக்கலும் இல்லாத நிலையில், எவ்வித அவசரத் தேவையுமில்லா பொழுதில் நமது நேர விரைவுக்காக மற்றவர்களுக்கு தொலைபேசி அழைப்பெடுத்து அவர்களை தொல்லைப்படுத்துவதும் தர்மசங்கடத்துக்குள்ளாக்குவதும் நாகரியமற்றது.

நாம் ஒருவருக்கு அழைப்பு எடுக்கின்றபோது அவர் வேலையில், வணக்கத்தில், கூட்டத்தில், தூக்கத்தில் இருக்கலாம். அவரிடமிருந்து நமது அழைப்புக்கு பதில் வராதவிடத்து மீண்டும் மீண்டும் அழைப்பை மேற்கொண்டு தொல்லை கொடுக்காமல் இருக்க வேண்டும். ஏதாவது அவசரத் தேவைக்கு அழைப்பை மேற்கொண்டு உரியவரிடமிருந்து பதில் வராதவிடத்து நமது அவசரத்தை ஒரு குறும் தகவலின் ஊடாக அனுப்பி வைப்பதே சிறந்தது.

தொலைபேசி மூலமாக ஒருவருடன் தொடர்பு கொள்ளக் கூடியவர் ஆரம்பத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதே ஒழுக்கம் நிறைந்ததாகவும் தேவையற்ற பிரச்சினைகளிலிருந்து தவிர்ந்து கொள்ளவும் செய்யும். ஒருவரோடு தொடர்பு கொள்ளும்போது நாம் யார் என்பதை அடையாளப்பத்துவது அவசியம் என்பது நிச்சம் மனதில் நிறுத்தப்பட வேண்டியயொன்றாகும். குறிப்பாக தொலைபேசியினூடாக நாம் தொடர்பு கொள்ளும்போது நாம் யார் என்பதை அடைளாப்படுத்தாவிட்டால் தொடர்பு கொண்டவர் கோபத்தில் அழைப்பைத் துண்டிக்க வேண்டிய வாய்ப்பிருக்கிறது, சிலர் தொடர்பு கொண்டுவிட்டு மறு முனையில் இருப்பவரை நீங்கள் யார் என வினவுவது அநாகரீகமான செயற்பாடாகும். அவ்வாறு கேட்பது தொடர்பாடல் நாகரியத்தை மலினப்படுத்துவதுடன் நம்மையும் நாகரியமற்றவர் என்று புடம்போட்டும் காட்டக்; கூடும்.

அதனால், தொடர்பு கொண்டவரே தன்னை அறிமுகம் செய்வதே தொலைபேசி உரையாடல் அல்லது கருத்துப் பரிமாறலுக்கான ஒழுங்குப் பொறிமுறையாகும். இந்த ஒழுங்குப் பொறிமுறையல்லாத தொடர்பாடல்களைத் தவிர்த்துக் கொள்வது அவசியம். இவ்வாறில்லாவிடின், நம்மை நாமே நாகரியமற்ற பண்புள்ளவர் என்ற மனப்பதிவை மற்றவர்களிடத்தில் ஏற்படுத்துகிறோம்.

இன்னும், கூட்டங்களில் அமர்ந்திருக்கும் ஒருவர் பிறரோடு தொடர்பு கொள்வதும் தனக்கு வரும் அழைப்புக்கு பதில் வழங்குவதும் நாகரியமற்ற செயலாகும். அவ்வாறு நடந்து கொள்வது கூட்டத்தில் அமர்ந்திருப்போருக்கும் அதை நடத்துபவருக்கும் தொல்லைதரும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. எனவே கையடக்கத் தொலைபேசிகளை உபயோகிப்பவர்கள் கூட்டங்களின்போது இத்தகைய செயலை கண்டிப்பாக தவிர்ந்து கொள்வது அவர்களைப் பண்பாளர்கள் என்று பிறரை எண்ணச் செய்யும். தொலைபேசியைத் துண்டிக்காது இருக்க வேண்டுமென்றால் ‘மொபைலை ஸைலென்ட் மூடில்’ வைத்துக்கொள்ளலாம். வணக்க வழிபாடுகளின்போதும் கூட்டங்களின் போதும் அவை ஆரம்பிப்பதற்கு முன்னதாக இது தொடர்பில் ஞாபகமூட்டுவது பயன்தக்கதாக அமையும்.

வாகன செலுத்துனர்கள் கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக்கொண்டே வாகனங்களைச் செலுத்துவர். இவ்வாறு வாகனங்களைச் செலுத்திக்கொண்டு கையடக்கத் தொலைபேசியில் உரையாடுவது அதிகளவிலான விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. விபத்துக்களில் 28 சதவீதமானவை வாகனங்களைச் செலுத்தும்போது கையடக்கத் தொலைபேசியினூடாகப் பேசுவதாலும் குறுந்தகவல்கள் அனுப்புவதாலும் ஏற்படுவதாக சர்வதேச ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இதனாலேயே, பல நாடுகளில் இது ஒரு தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலும் வாகனங்களைச் செலுத்திக்கொண்டு கையடக்கத் தொலைபேசியில் உரையாடுவது தடுக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் அச்சட்டத்தை பலர் மீறியே நடந்துகொண்டிருக்கின்றனர்.

கையடக்கத் தொலைபேசியின் பயன்பாடுகளில் டெக்ஸ்ட் மெஸேஜ் அனுப்பவது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. நமது கையடக்க தொலைபேசிகளுக்கு வந்து சேரும். அத்தகவல்கள் ஊர்ஜிதப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிரப்படுவது நம்மை பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கச் செய்யும் என்பது மனங்களில் பதியப்பட வேண்டிதொன்றாகும் ஒரு சிலர் வேண்டத்தகாத விடயங்களையெல்லாம் குறுங்தகவல்களாக அனுப்புகின்றனர். ஆபாசமான, படங்களையும், உறுதிப்படுத்தப்படாத செய்திகளையும், தகவல்களையும் அனுப்புவதும் அடுத்தவர்களின் மனங்களைப் புண்படுத்தக் கூடிய செய்திகளைப் பரப்புவதும் என பலர் அதேயே பொழுதுபோக்காக செய்துகொண்டிக்கிறார்கள். இத்தகையவர்கள் பல ஆபத்துக்களில் மாட்டிக்கொண்டு சட்டத்தின் பிடிக்குள் சிக்குகின்றனர்.


கையடக்கத் தொலைபேசியானது தகவல் தொடர்பு வசதிக்காக வந்த ஒரு சாதனமாக இருந்தபோதிலும், அதை வேடிக்கையாகப் பயன்படுத்துவது தனிநபரிலும் குடும்பத்திலும் சமூகத்திலும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கச் செய்கிறது.

கையடக்கத் தொலைபேசிகளில் உள்ள வீடியோ போட்டோ கமெராக்களை வைத்து அந்நியப்பெண்களை படம் எடுப்பதும் அவற்றை அசிங்கமான முறையில் பயன்படுத்துவதும் தம்முடன் தொடர்பு கொள்வோரின் உரையாடல்களை திருட்டுத்தனமாக பதிவு செய்வதும் மிகவும் கேவலமான செயற்பாடுகளாகும்;. இவை பல விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறு திருட்டுத்தனமாக படம் எடுக்கப்பட்ட பலர் தங்களது கௌரவமும் மரியாதையும் பகிரங்கப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து உயிர்களை மாய்த்துக்கொண்ட சம்பவங்களும் நம்நாட்டிலும் சர்வதேசத்திலும் இடம்பெற்றுள்ளன. இத்தகைய விபரிதங்களை விளையாட்டாகவும் தொழிலாகவும் மேற்கொள்வோர் அடுத்தவரின் துன்பங்களை உணரத் தவறிவிடுகின்றனர். மற்றவரைத் துன்புருத்தி இன்பம் காண்பது என்பது ஒரு வகையான உளவியல் பிரச்சினை என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். சமூகமும் சமூக அங்கத்தவர்களும் இத்தகைய கேவலமான நடவடிக்கைகளினால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது புரியப்படுதல் அவசியமாகும்.

எந்த பொந்தில் எந்தப் பாம்பு உள்ளது என்பதை சரியாக தெரிந்து கொள்ள முடியாதொரு காலகட்டத்தில் வாழும் நாம் பழுதடைந்த கையடக்கத்தொலைபேசிகளை திருத்துவதற்காக போன் திருத்துனர்களிடம் ஒப்படைத்தவர்கள் பெரும் அசௌகரிங்களுக்கு உள்ளாகும் சம்பவங்களும் நாளாந்தம் நடந்தேருகின்றன. அதனால் திருத்தும்பணிக்காக திருத்துனர்களிடம் போன்களை ஒப்படைக்கும்போது மிகக் கவனமாக இருப்பது நம்மை ஆபத்துக்களிலிருந்து பாதுகாக்கும்.

அத்துடன், பாலகன் முதல் வயோதிபர் வரை கையடக்கத் தொலைபேசியைக் காணாத, பயன்படுத்தாத எவரும் இன்று இல்லையென்றே கூற வேண்டும். அந்தளவுக்கு அதன் முக்கியத்துவம் மாறிவிட்டது. இதனிடையே பிள்ளைகள் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தும்போது பெற்றோர்கள் அவர்களின்பால் கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயமாகவுள்ளது. பிள்ளைகள் பெற்றோரிடம் அமானிதமாக ஒப்படைக்கப்பட்ட செல்வங்கள். எனவே அவர்களை ஒழுக்க விழுமியத்துடன் வளர்க்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களைச் சார்ந்தது.

நவீன ஊடகமாகக் கருதப்படும் கையடக்கத் தொலைபேசிகளை இன்றைய ஒரு சில இளைய தலைமுறையினர் வேடிக்கைக்காகவும் மற்றவர்களை புன்படுத்துவதற்காகவும் தகாத செயற்பாடுகளுக்காகவும் பயன்படுத்துகின்றனர். இதனால் பல மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. இளைஞர்களிடையே ஒழுக்கச் சீர்கேடுகள் வேகமாகப் பரவுவதற்கு பல்வேறு வசதிகளுடன் உலக சந்தையில் வந்து குவியும் கையடக்கத் தொலைபேசிகள் காரணமாக அமைந்துள்ளதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இது மாத்திரமின்றி, மாணவர்களின் கல்வியிலும் பாதிப்புக்களைத் தோற்றுவிப்பதாக அறியமுடிகிறது. பள்ளிக்காலங்களில் காதலிக்கும் மாணவர்கள் காதல் கடிதங்களை பரிமாறுவதற்குப் பதிலாக நவீன முறையில் மொபைல் போன்களை வாங்கிக் கொடுத்து காதலிக்கும் நிலைமைக்கு இன்றைய இளைய தலைமுறையினர் முற்பட்டுள்ளமையானது ஓர் ஆரோக்கியமற்ற சமூகக் கட்டமைப்பை எதிர்காலத்தில் உருவாக்கும் என்ற அச்சத்தை தோற்றுவித்துள்ளதாக சமூக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இத்தகைய தவறுகள் சமூகத்தில் நவீன வடிவில் ஆபத்துக்களை உருவாகுவதற்கு ஏதுவாக அமைகிறது. அதனால்,; பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் மொபைல் போன் பாவைனை தொடர்பில் அக்கறை காட்ட வேண்டும். அவர்களை ஒழுக்க விழுமியமிக்க வழியில் ஆன்மீக ரீதியில் வாழ்வதற்கு வழிகாட்ட வேண்டியது அவசியமாகும்.

சமூக வலைத்தளங்களும் பாதுகாப்பும்

நவீன ஊடக சாதனங்களின் உலகளாவிய பயன்பாட்டுக்கு ஈடுகொடுக்கும் வகையில் நம்நாட்டிலும் அதன் பயன்பாட்டின் வளர்ச்சி அதிகரிதுள்ளது. இலங்கையில் 4.5 மில்லியன் பேர் இணையத்தள வசதிகளைக் கொண்டுள்ளனர். குறிப்பாக இளைய தலைமுறையினர் கையடக்கத்தொலைபேசி மூலம் இணையத்தளங்களை பார்வையிடுபவர்களாகவும் அவற்றைப் பன்படுத்துபவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக சமூக வலைத்தளத்தில் அதிகளவில் பேஸ்புக்கையே பயன்படுத்துகின்றனர். இந்த பேஸ்புக் பாவனையானது பல பலவழிகளில் ஆபத்துக்களில் சிக்கச் செய்துள்ளது. உயிரைக் கூட இழக்கச் செய்துள்ளது.


சமூக வலைத்தளங்களினூடாக பயனளிக்கக் கூடிய விடயங்களை தேடுவதிலும் பாhக்க தேவைற்ற விடயங்களை தேடும அவற்றை பகிர்வதும் அவற்றைப் பதிவேற்றுவதும் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கச் செய்கிறது.

பேஸ்புக் மோகம் பலரை உளவியல் பிரச்சினைகளுக்குள் தள்ளியுள்ளதையும் ஆய்வுகள் தெரவிக்கின்றன. இதன் பயன்பாட்டினால் ஆபத்துக்கள் ஏற்படாமல் அவற்றைப் பயன்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டியது கலத்தின் தேவையாகவுள்ளது.

குறிப்பாக சமூக ஊடகப் பாவனையின்போது நமது விபரங்கள் மூன்றாம் தரப்புடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. பேஸ்புக் வடிவமைப்பளர்கள் ஒவ்வொருமுறையும் தமது இணையத்தளத்தை மீள்வடிவமைப்பிற்குட்படுத்தும்போது பாவனையாளர்களின் இரகசியத்தன்மைக் கட்டமைப்புக்கள் பாதுகாப்புக்குறைவான நிலைக்குத் தள்ளப்படுகிறது. பேஸ்புக் விளம்பரங்கள் கணனி உரிமையாளர்களின் அனுமதியின்றி கணனிகளின் மெம்பொருள்களுக்கு சேதம் விளைவிக்கக் கூடிய மென்பொருட்களை தாங்கி வரக்கூடியவை. ஒவ்வொரு பேஸ்புக் பாவனையாளரும் அவருக்குத் தெரியாமலே அவரின் நண்பரினால் சிக்கல்களுக்குள் தள்ளப்படலாம்.

வழிகெட்டவர்கள் அல்லது வேண்டத்தகாதவர்கள் போலியான முகத்தோற்றங்களுடன் போலியான பேஸ்புக் பக்கங்களை உருவாக்கி அதன் மூலம் பிரச்சினைகளைத் தரலாம். சமூக ஊடகப் பாவனை தொடர்பான அறிவு முதிர்ச்சியும் விவேகமமின்றி பாவிப்பர்களுக்கு இத்தகைய பேஸ்புக் ஆபத்துக்கள் உள்ளதாக இணைய நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனவே, சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றபோது பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதற்கான அறிவையும் விவேகத்தையும் பெற்றுக்கொள்வது அவசியமாகும். எவரும் பார்க்கக் கூடாதென கருதும் நிழற்படத்தை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யாதீர்கள், சிலர் குளியல் அறைக்குச் குளிக்கச் செல்வதையும் பேஸ்புக் மற்றும் டுவீட்டர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதைக் காணக் சுடியதாகவுள்ளது.

நீங்கள் உங்களது வாழ்வில் நண்பர்களாக பழகுபவர்கள், உங்களது உண்மையான நண்பர்களைத் தவிர ஏனையவர்களை சமூக ஊடகங்களில் நண்பர்களாக இணைத்துக்கொள்ளாதீர்கள். கணக்கு இரகசியக் குறியீட்டை ‘பாஸ்வேட்’ மூன்றாம் தரப்பினரிடம் வழங்காதீர்கள்.

அத்துடன், பேஸ்புக் போன்ற சமூக இணைத்தளத்திலுள்ள பாதுகாப்புக் கட்டமைப்பைப் பயன்படுத்தும் வகையில் அறிவையும் விவேகத்தையும் வளர்த்துக்கொள்வது அவசியமெனவும் இணைய நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்


இந்தவகையில் நவீன ஊடகங்கள் ஆபத்துக்கள் அல்லாத பயன்மிக்கத்தக்க ஊடகங்களாக மாற்றப்பட வேண்டுமாயின், அவற்றின் முறை தவறிய பாவனையினால் சீரழிந்து விடாது பயனடைத்து கொள்வதற்கும் மற்றவர்களை துன்பத்தில் ஆழ்த்தாது அவர்களும் இவற்றின் பாவனையினால் நன்மையடைந்து கொள்வதற்கும் நவீன ஊடகங்களை அதற்குரிய பாவனை ஒழுங்கு முறைக்கேற்ப பயன்படுத்தி நவீன ஊடகங்களின் முறை தவறிய பாவனையினால் ஏற்படும் ஆபத்துக்களிலிருந்து தவிர்ந்து கொள்வது அவிசமாகும்.

எம்.எம்.ஏ.ஸமட்

No comments:

Post a Comment

Pages