புத்தளம் வரலாற்றில் பல குறுந்திரைப்படங்களை வெளியிட்ட NINA.ED Film Production தயாரிப்பில் கற்பிட்டியின் குரல் ஊடக அனுசரனையில் உருவான ‘அம்மாவின் பரீட்சை’ குறுந் திரைப்படத்தின் இருவெட்டு AMMAR HALL-ல் வெளியிட ஏற்பாடாகியுள்ளது.
இக்குறுந்திரைப்படத்தை பற்றி,
எமது இலங்கை மாவட்டத்தில் தரம் ஐந்து பரீட்சையில் பங்கு கொள்ளும் இளம்சிறார்களை படிப்பதற்கு தூண்டுகோளாக இருக்கும் பெற்றோர் செய்யும் தவறுகள்.
* தரம் ஐந்தில் படிக்கும் அச்சிறார்களை படி,படி என்று பல இன்னல்களுக்கு முகம் குடுக்க வைப்பது.
* அதே நேரத்தில் இரவு நேரங்களில் கூட இடைவிடாது அவர்களை தனியார் வகுப்புக்களுக்கு அனுப்புதல்.
* ஓய்வு என்பதை கூட பொருட்படுத்தாமல் அந்த நேரங்களில் கூட படி என் துண்புருத்துதல்
இப்படி எல்லாம் துண்புறுத்தப்பட்டு மாணவர்களை கல்வி கற்க வைக்கும் பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பதே இக்குறுந்திரைப்பட்த்தின் கருத்தாக உள்ளது.
பரீட்சை முடிவுகளைக் கொண்டு மாணவர்களின் திறமைகளை மதிப்பிட வேண்டாம். எல்லா மாணவர்களும் திறமையானவர்களே! பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் சகோதர சகோதரிகள் மற்றும் அயலவர்கள் மிகவும் அவதானத்துடன் அந்த பிள்ளையுடன் இருக்கவேண்டும். நீங்கள் எதிர்பார்த்த பெறுபேறுகள் உங்கள் பிள்ளைக்கு கிடைக்காமல் இருந்து இருக்கலாம், அல்லது எதிர்பாராத பெறுபேறு உங்கள் குழந்தைக்கும் கிடைத்து இருக்கலாம். இவை யாவும் இறைவனின் நாட்டமே.
உங்கள் பிள்ளை சித்தியடையாது இருந்தால், இந்த நேரத்தில் அவர்களுக்கு மிக ஆதரவாக இருங்கள். அவர்களுக்கு ஏசுவதோ அல்லது பழைய விடயங்களை ஞாபகபடுத்திவதிலோ எந்த பிரயோசனமும் இல்லை.
சில பெற்றோர்கள் தந்து பிள்ளையின் பேறுபேறுக்கு இவைதான் காரணமென டிவி, கம்ப்யூட்டர்களை இன்றே பெட்டியில் கட்டிவைப்பது , அல்லது அவர்களது நண்பர்களை / உறவினர்களை குறைசொல்வது என சில மடமையான விடயங்களில் ஈடுபடுவதினை காணலாம். இவை யாவையும் முற்றாக தவிர்ந்து, சில வாரங்களுக்கு பின் அவர்களது படிப்பின் முன்னேற்றத்துக்கான அணுகுமுறைகளை ஆராய்ந்து சில முடிவுகளை எடுப்பது புத்திசாலிதனம்.
பரீட்சையில் சிறந்த பெறுபேறு எடுத்த மாணவர்களின் பெற்றோர்கள், அவர்களது குழந்தைகளுக்கு மற்ற நண்பர்களுடன் கர்வமாகவோ, பெருமையுடனோ நடக்காது அவர்களுடன் சகஜமாகவும், ஆதரவாகவும் இருக்குமாறு அறிவுரை சொல்லலாம்.
முக்கியமாக, ஆசிரியர்களுக்கு, பாடசாலைக்கு குறை சொல்வதனை முற்றாக தவிர்த்துகொள்ளுங்கள். பாடசாலை அதன் பங்களிப்பினை எப்போதும் முழுமையாக செய்யும்போது அவர்களது குறை இருப்பின் அதனை தனிப்பட்ட முறையின் அணுகுங்கள். சிலர் பாடசாலையினை அல்லது ஆசிரியர்களை பலி தீர்த்துகொள்ள இந்த சந்தர்பதினை பார்த்துகொண்டு இருக்கின்றனர்.
உங்கள் பார்வையில் உங்கள் பிள்ளையினை விட திறமை குறைந்தவர்கள் உங்கள் கும்பத்திலே அல்லது ஊரிலோ இந்த பரீட்சையில் சித்தி அடைந்து இருப்பார்கள். நீங்கள் அவர்களை பொறாமையுடன் பார்க்காது, அவர்களுக்கு வாழ்த்து சொல்லுங்கள், உங்கள் பிள்ளைகளுக்கும் அவ்வாறே செய்ய சொல்லுங்கள்.
நீங்கள் உங்கள் பிள்ளைகளுடன் நடந்துகொள்ளும் விதத்திலே உங்கள் பிள்ளைகளின் அடுத்த கட்ட முன்னேற்றமோ அல்லது பின்னேற்றமோ இருகின்றது.
0 Comments