ஆசியாவின் அழகிய தேசமான இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினம் இன்றாகும். 1948 ஆம் ஆண்டு, மாசி மாதம், 4 ஆம் திகதி இலங்கை பிரித்தானியாவின் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது.
இலங்கை தேசம் பல்லின மக்கள் வாழும் ஒரு நாடாகும். இந்த தேசத்தில் வாழும் மக்கள் ஒவ்வொருவரும் சந்தோசமாகவும், சமாதானமாகவும், வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்தருள்வானாக.
- இலங்கையின் ஜனாதிபதி, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்காக.
- இலங்கை பொருளாதாரத்தில் வளர.
- சகல துறைகளிலும் பாரிய வளர்ச்சி ஏற்பட.
- வீடுகள், காணிகள் இல்லாதோர் அவைகளை பெற்றுக் கொள்ள.
- இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்புகளை பெற.
- இனங்களுக்கிடையே ஒற்றுமை உண்டாக.
- சிறுவர், பெண்கள் துஷ்பிரயோகங்கள் மற்றும் பாலியல் குற்றங்கள் இல்லாதொழிக்கப்பட.
- அசுத்தமான அரசியல் வியாதிகளிருந்து இலங்கை குணமடைய.
நாம் எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ்விடத்தில் பிரார்த்திப்போம்.
கற்பிட்டியின் குரல் தாய்த்திருநாட்டின் சுதந்திர தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறது.
இலங்கை குடிமக்கள் அனைவருக்கும் கற்பிட்டியின் குரலின் சுதந்திர தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
0 Comments