கற்பிட்டியின் குரலின் ஊடக அனுசரனையில் - வெட்டுக்கிழி (குறுந்திரைப்படம்) வெகு விரைவில்


எனது நண்பனின் உருவாக்கத்தில் உருவான வெட்டுக்கிழி (குறுந்திரைப்படம்) வெகு விரைவில்...

எமது புத்தளம் கலை நட்சத்திரங்களின் திறமைகளை வெளியுலகில் எடுத்துச்சொல்ல தயாராகிவிட்டார் “வெட்டுக்கிழி“ குறுந்திரைப்படத்தின் இயக்குனர் Mnm Farhan​

எமக்கான கலையுலகத்தை அமைப்பத்தாக பலர் பல்வேறுதரப்பட்ட முயற்சியில் ஈடுபட்டவண்ணம் உள்ளனர் அந்தவகையில் தான் ஒரு இயக்குனராக இருந்த போதிலும் பல்வேறுபட்ட கலையுலக திறமையாளர்களை தேடி அவர்களிடம் ஒளிந்திருக்கும் இதுவரை நம்மில் பலர் அறியாத திறமைகளை வெளிக்கொண்டும் புதியதொரு முயற்சியை வெட்டுக்கிழி என்னும் பெயருடன் ஆரம்பித்துள்ளார். 

இக்குறும்திரைப்படத்தின் காட்சிகளினை YouTube,Facebook இணையத்தளத்தில் வெகு விரைவில் FINE PIX VIDEO CREATIONS குழுவினர் வெளியிடயிருக்கின்றார்கள். என்பதையும் Mnm Farhan அறிவித்திருக்கிறார். 

அத்தோடு இக்குறும்திரைப்படத்தை பற்றி Mnm Farhan மேலும் கூறியதாவது,

நான்கு சிறுவர்கள் தெருவோரமாக நின்று கதைத்து கொண்டு இருக்கின்றர். அச்சந்தரப்பத்தில் ஒருவர்  ஏதாவது விளையாட வேண்டும் என்ற கூற மற்றுமொறு சிறுவர் ஒன்று,இரண்டு,மூன்று என கூற நான்கு சிறுவர்களும் ஓட்டம் எடுக்கின்றனர்.

அத்தோடு அவர்கள் எற்றி வைத்தை எல்லையை ஒருவர் அடைய மற்ற சிறுவர்களுக்கு அவர் நான்தான் முதலாவதாக அடைந்தேன் ஆகவே, விளையாட்டை நான்தான் ஆரம்பித்து வைப்பேன் என்கிறார்.

மீண்டும் ஒரு அரையில் நால்வரும் விளையாட்டை துவங்கி வைக்கிறார்கள் அச்சந்தரப்பத்தில் மின்சாரம் தடைபடுகிறது. அத்தோடு சக மற்ற சிறுவர்கள் இங்கு இருக்கும் நண்பருக்கு கூறுகின்றார்கள் மின்சாரம் தடைபட்டு விட்டது வாருங்கள் கொய்யா பழ தோட்டத்திற்கு சென்று பழங்களை சாப்பிடலாம் என்று வெட்டுக்காட்டு பகுதியில் கொய்யாப்பழ தோட்டத்தை அடைந்து பழங்களை பறிக்கிறார்கள் அதன் பிற்பாடு பழம் பறிக்கையில் கண்ணிற்கு எட்டும் தூரத்தில் கையில் ஒரு பொம்மையுடன் ஒரு பெண் குழந்தை இவர்களை நோக்கியவாரு நிற்கின்றது.

இங்கே இருந்துதான் இந்நான்கு சிறுவர்களுக்கும் பிரச்சினை ஆரம்பிக்கின்றது... என்று கூறி மீதி பகுதியை வெகு விரைவில் இக்குறும்திரைப்படத்தின் காணொளியில் நீங்கள் எதிர்பார்த்தவாறு காணலாம் என்று இயக்குனர் முடித்தார்.

சிறு வயதிலேயே இருந்துகொண்டு தனது தனிப்பட்ட முயற்சியால்  புத்தளம் மாவட்ட கலைஞர்களுக்கான ஓர் அறிமுகத்தை கொடுக்க முன்வந்த MNM FARHAN க்கு கற்பிட்டியின் குரல் நிருவாகத்தின் சிறப்பான வாழ்த்துக்கள்.


Post a Comment

0 Comments