இன்பம் எனும் ஒளியளித்து
இம்மண் உலக மானிடர்களை
இமய அரணாய்க் காக்கும்
இறைவனுக்கே புகழனைத்தும்!
தியாகச் செம்மல்களே
திரையிழக்கத் தயாராகுங்கள் – மாறாக
மறைவழி மறைத்துரைத்து
மனமிழந்த ஈகை வேண்டா!
எளிமையின் வடிவமே
எம்பெருமானார் (ஸல்) காட்டித் தந்தது – மாறாக
இறுமாப்புடைத்து கருவமுறுதல்
இம்மைக்கு நன்றன்று!
ஈருலகமும் மகிழுமிறையவனின்
ஈடேற்றமுற அன்புரைக்க – மாறாக
சகோதரனிடத்து வெறுப்புற்று
சலிப்படைந்து விலக வேண்டா!
பகிர்ந்துண்ணுதல் பாசமிளிர்தல்
பண்டையகாலத்து மட்டுமின்றி – மாறாக
எக்காலத்தும் சாந்தியுறும்
எண்ணமும் தூய்மையுறும்!
மூடநம்பிக்கையிலா சமுதாயத்தின்
மூலதனமே இஸ்லாமேயன்றி – மாறாக
நாவால்கூட சொல்லயியலா
நவில்தொறு மார்க்கமேயாம்!
இறைசொன்ன திருநாளாம்
மறைசொன்ன பெருநாளாம்
பறை கொட்டிப் பாடிடுவோம்
நாயனருள் வேண்டியே!
ஈத் முபாரக்!…
அனைத்துலக மக்களுக்கும் இந்த இறையடியானின் நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகள்… இந் நன்நாளில் எல்லாம் வல்ல இறைவன் நமக்கு நோய் நொடியற்ற வாழ்வை வழங்கவும், இம்மை மறுமையில் வல்ல ரஹ்மானுக்கு பிடித்தமான வாழ்வு வாழவும், மறுமை நாளில் எம் பெருமானார் கோமான் நபிகள் நாயகம் ரஸுலே கரீம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பரிந்துரையைப் பெற்ற மக்களுள் ஒருவராக இடம் பெறவும் எல்லாம் வல்ல அல்லாஹ்வை வேண்டிக் கொள்கிறேன்… யா அல்லாஹ் இந்த ஆண்டில் நோன்பு நோற்ற, மற்றும் நோற்க நிய்யத் செய்து நோற்க இயலா அத்துணை மக்களின் நோன்பையும், அத்துணை மக்களின் உள்ள ஏற்பாடுகளையும் உன்னால் அங்கீகரிக்கப்பட்டதாக ஆக்கி அருள் மழை பொழிவாயாக கருணையாளனே… அல்ஹம்துலில்லாஹ்…
KV குடும்பத்தினர் அனைவரிற்கும் இனிய நோன்பு பெருநாள் நழ்வாழ்த்துக்கள்
-KV நிருவாகம்-
0 Comments