முடி திருத்தும் தொழிலாளிக்கு 150 கார்கள்: ரூ.3.2 கோடிக்கு வெளிநாட்டு சொகுசு காரும் வைத்துள்ளார் - KALPITIYA VOICE - THE TRUTH

Monday, March 6, 2017

முடி திருத்தும் தொழிலாளிக்கு 150 கார்கள்: ரூ.3.2 கோடிக்கு வெளிநாட்டு சொகுசு காரும் வைத்துள்ளார்


பெங்களூருவில் உள்ள அசோக் நகரை சேர்ந்தவர் ரமேஷ் பாபு (45). கடந்த 1994-ம் ஆண்டு முதல் இவர் பெங்களூருவில் உள்ள போரிங் மையத்தில் ஆடம்பர சலூன் வைத்து, முடி திருத்தும் பணி செய்து வருகிறார்.

பெங்களூருவில் பிரபல தொழி லதிபர் விஜய் மல்லையாவுக்கு பிறகு, இவர் ரூ.3.2 கோடி மதிப்பில் மெர்சடிஸ் மேபேக் எஸ்600 என்ற வெளிநாட்டு சொகுசு காரை அண்மையில் வாங்கியுள்ளார் எனத் தெரியவந்தது.

இதுகுறித்து ரமேஷ் பாபு கூறும்போது, “எனக்கு 9 வயது இருக்கும்போது என் அப்பா இறந்துவிட்டார். அதன் பிறகு என்னுடைய அம்மா மிகவும் கஷ்டப்பட்டு என்னை 10-ம் வகுப்பு வரை படிக்க வைத்தார். குடும்ப வறுமை காரணமாக சிறுவயதில் இருந்தே வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பல்வேறு வேலைகளை செய்து கொண்டிருந்தபோது, ஒரு சலூனில் முடி திருத்தும் வேலை கிடைத்தது.

அங்கு சில ஆண்டுகள் பணி யாற்றிய பிறகு, 1994-ல் சொந்தமாக சலூன் வைத்தேன். நான் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்த பணத்தைக் கொண்டு முதலில் மாருதி ஆம்னி வேன் வாங்கினேன்.

நான் பயன்படுத்திய நேரம் போக, மற்ற நேரங்களில் அதை வாடகைக்கு விட்டு பணம் சம் பாதித்தேன். வாடகை கார் தொழி லில் நல்ல வருமானம் கிடைத்ததால் மேலும் சில பழைய கார்களை வாங்கி வாடகைக்கு விட்டேன். ஒரு கட்டத்தில் என்னிடம் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேர்ந்ததால் சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் தொடங்கினேன்.

இப்போது என்னிடம் 3 ஆடி கார்கள், 10 பி.எம்.டபுள்யூ, 11 மெர்சடிஸ் பென்ஸ், 1 ரோல்ஸ் ராய்ஸ், 3 ஜாகுவார் உட்பட 150 கார்கள் உள்ளன. இந்த ஆடம்பர கார்களை வாடகைக்கு விட்டு, மாதந்தோறும் பல லட்சங்கள் சம்பாதிக்கிறேன். வெளிநாட்டு தலைவர்கள், நடிகர்கள், விளை யாட்டு வீரர்கள் என பிரபலங்கள் பெங்களூரு வந்தால் என்னிடம்தான் வாடகைக்கு கார் எடுத்துச் செல் வார்கள்” என்கிறார். பல கோடி ரூபாய் சொத்துக்கள் இருந்தும் முடி திருத்தும் வேலையை தொடர்ந்து செய்கிறார் ரமேஷ்பாபு.

No comments:

Post a Comment

Pages