லிப்ட்டில் வரும் லிப்ஸ்டிக் எனும் எமன்


சில பெண்களுக்கு லிப்ஸ்டிக்கின் மேல் கொள்ளைப்பிரியம். வேலைக்குப் போனாலும் சரி அல்லது விழாக்களுக்கு போனாலும் சரி எல்லா இடத்திலும் லிப்ஸ்டிக் போட்டுக்கொள்ளாமல் செல்வதில்லை. ஆனால் அதன் விளைவுகளை சிறிதும் யோசிக்காமல் லிப்ஸ்டிக் போட்டுக்கொள்கின்றனர்.
உதடுகள் பளபளப்பாக தெரிவதற்காக பெட்ரோலியம் கலந்த இந்த உதட்டுச்சாயத்தை உதட்டில் தடவிக்கொண்டு செல்கின்றனர். ஆனால் இந்த உதட்டுச்சாயம் நம் உமிழ்நீரில் கலந்து வயிற்றுக்குள் சென்று விடுகின்றது. அதனால் வயிற்றுவலி, வாந்தி மயக்கம், ஒவ்வாமை, தலைச்சுற்றல் ஆகியவை ஏற்படுகின்றது.
இயற்கையான சிவப்பான உதடு கூட தொடர்ந்து சாயம் பூசுவதால் கருப்பாகிவிடுகின்றது. நாளடைவில் உதட்டுச்சாயம் இல்லாமல் வெளியே செல்லமுடியாதபடிக்கு மாற்றிவிடும்.
இந்த உதட்டுச்சாயத்தால் ஏகப்பட்ட பிரச்சினைகள் அதில் சில கீழேக்கொடுக்கப்பட்டுள்ளன.
1. லிப்ஸ்டிக்கில் உள்ள ரசாயணத்தின் பெயர் டிரைக்ளோசன். இந்த ரசாயணத்தினை எலிக்கு கொடுத்து பார்த்ததில் எலி 20 நிமிடத்தில் இறந்துவிட்டது.
2. இதை செய்து பார்த்து நிருபித்துள்ளனர். கலிபோர்னியாவின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த ரசாயண வேதிப்பொருள் வீட்டைச் சுத்தம் செய்யும் கிருமி நாசினிகளில் கலக்கப்பட்டிருக்கின்றது.
3. இந்த லிப்ஸ்டிக் முதலில் பளபளப்பை கொடுக்கும் நாளாக நாளாக உதட்டில் தோல் உரிய ஆரம்பிக்கும் பின்னர் உதடு கருமையாக மாறிவிடும்.
இயற்கை வழிகள்
நாங்கள் லிப்ஸ்டிக் போட்டு பழகிவிட்டோம் எங்கள் விட முடியாது வெறெதாவது ஐடியா சொல்லுங்கள் என்று கேட்கும் சகோதரிகளுக்கு கீழ்கண்ட இயற்கையான லிப்ஸ்டிக் முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. கருமையான உதடுகளை இயற்கையிலே உடையவர்கள் தினமும் இரவில் தூங்கப்போகும் முன் பீட்ருட் கிழங்கினை சிறியதாக நறுக்கி உதட்டில் தேய்த்துவிடவும். இந்த சிகப்பு நிறம் உதட்டை சிவப்பாக மாறிவிடும். வெளியே போகுமுன் உதட்டில் தேய்த்துவிட்டு சென்றால் லிப்ஸ்டிக் போட்டவாறும் இருக்கும் உடலுக்கும் கேடு கிடையாது.
2. பளபளப்பான உதடு வேண்டும் என்று கேட்பவர்களுக்கு தேங்காய் எண்ணை ஒரு சொட்டு எடுத்துக்கொண்டு அதல் பீட்ருட் சாற்றினை விட்டு நன்றாக கலக்கி பருத்தி துணியால் தொட்டு உதட்டில் மென்மையாக பூசவும். இதுவே இயற்கையான உதட்டுச்சாயம்.
3. லிப்ஸ்டிக் போட்டு உதடுகள் கருப்பானவர்களும் இதை மேற்கொள்ளலாம்.

Post a Comment

0 Comments