கடவத்தை ரன்முத்துகம பகுதியில் இறந்த பெண் ஏழு நாட்களின் பின் வீடு திரும்பிய அதிசயம் - KALPITIYA VOICE - THE TRUTH

Tuesday, July 4, 2017

கடவத்தை ரன்முத்துகம பகுதியில் இறந்த பெண் ஏழு நாட்களின் பின் வீடு திரும்பிய அதிசயம்

வாகன விபத்தில் இறந்த குடும்பப் பெண் ஏழாவது நாள் வீடு திரும்பிய சம்பவம் ஒன்று கடவத்தை ரன்முத்துகம பகுதியில் நடந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, குடும்ப பெண் ஒருவர் வாகன விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அவரது உடலை பிள்ளைகள் அடையாளம் காட்டிய பின் அடக்கம் செய்யப்பட்டது.
இருப்பினும் 7வது நாள் காரியங்கள் செய்த தினத்தன்று குறித்த பெண் வீடு திரும்பிய சம்பவம் அப்பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொழுது, பிள்ளைகள் தவறான சடலத்தை அடையாளம் காட்டியதாலேயே குழப்பம் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment

Pages