இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்பார்கள் உண்மையில் இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்களா???


இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்பார்கள் உண்மையில் இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்களா??? இன்று அரச ஆட்சியிலும், பல்வேறு துறைகளிலும் சாதனைத் தலைவர்களாக இருப்பவர்கள் எல்லாம் நேற்றைய இளைஞர்கள். “அப்ப ஏன் இந்த கேள்வி” இன்று எமது ஊரில் போதை அடிமைகளாகவும், அன்றாட வாழ்வை சரியாக நடத்த முடியாமால் அடிமைகளாய் வாழ்ந்து கொண்டிருக்கும் கூட்டத்தினரும் நேற்றைய இளைஞர்களே. அது போல் இன்றைய இளைஞர்களில் எத்தனை பேர் தலைவர்களாகவும், துறைசார் சாதனையாளர்களாகவும் எத்தனை போதை அடிமைகளாக, வாழ்க்கையை துளைத்த கோழைகளாக வாழ்ந்து மடிவார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தான் இந்த கேள்வி...

இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்களாவதும், தருதளைகலாவதும்களாவதும் அவர்களுடைய மார்க்க அறிகளும், கற்ற கல்விளையும், எண்ணங்களையும், பண்புகளையும், ஈடுபாடு காட்டும் விஷயங்களையும், வாழும் முறைகளையும், மன உறுதியையும் மற்றும் சூழலையும் பொருத்தது.

கற்ற கல்வி நம்மைப் பண்படுத்தா விட்டால், சமூகத்திற்குப் பயன் தருவதாக இல்லா விட்டால் அந்தக் கல்வியால் என்ன பயன்? கற்றவர்களை எல்லாம் ஜாஹிலியத்தை நோக்கி இழுத்து செல்வது தான் இன்றைய நாகரீக மோகம், இந்த நாகரீக மோகம் எமது ஊரின் இன்றைய இளைஞர்களையும் தடுமாறச் செய்கிறது.


இன்றைய இளைஞர்களைப் பண்படுத்தும் வேலையை மௌலவிமார்களையும், இஸ்லாமிய இயக்கங்களை மாத்திரம் கை நீட்டிவிட்டு ஒதுங்கி விட முடியாது. நம் பங்கிற்கு நாமும் ஏதாவது செய்தாக வேண்டும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்வது முக்கியம். எத்தனையோ இளைஞர்கள் கடமைகளையும், பொறுப்புக்களையும் மறந்து தன்னை நம்பி ஒரு குடும்பம் இருப்பதையும் மறந்து வீண் பொழுதுபோக்குகளிலும், விளையாட்டு வேடிக்கைகளிலும் காலத்தை வீணடித்து வாழ்கையின் யதார்த்தை விளங்காமல் அலைகிறார்கள்.

இஸ்லாமிய இயக்கங்கள் இளைஞர்கள் நிலைகண்டு ஏதாவது செய்ய முன்வந்தால் இயக்க சாயங்கள் பூசி நொட்டை நொடசல் சொல்லி விமர்சிக்கும் சந்திகளில் இருக்கும் வாப்பமார்களும், நானா மார்களும் சிந்திக்க வேண்டும் நாளை எனது மகனும், தம்பியில் இந்த நிலைக்கு தான் வரப் போகிறான் என்பதை. வீண் விமர்சனகளையும் விதண்டாவாதங்களையும் தூக்கி ஒரு புறம் வைத்து விட்டு நம் பங்கிற்கு நாமும் ஏதாவது செய்தாக வேண்டும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து எமது இளைஞர்களைப் பண்படுத்தும் வேலையை இனிதே ஆரம்பிப்போம். யார் ஆரம்பிக்க போகிறார் என்பதை பார்க்காமல் நான் எனது கடமையை முதலில் செய்கிறேன் என முன்வருவோம். அல்ல்ஹாவின் திருபொருத்தை மாத்திரம் நாடி எமது இளைஞர்களைப் பண்படுத்தும் வேலையை இனிதே ஆரம்பிப்போம்.

“உன்னால் முடியும் நிச்சயமாக நீ வெல்வாய்” (positive approach) என்று நம்பிக்கையை உள்ளங்களில் விதைத்து அவர்களது துறையில் முன்னேற வழி செய்து கொடுப்போம். எத்தைனையோ திறமையான இளைஞர்கள் சிறு சிறு காரணங்களுக்காக நல்ல சந்தர்பங்களை நழுவ விட்டு விட்டு பாஸ்போர்டுடன் கிளம்பிவிடுகிறார்கள். எமது ஊரின் எதிகாலம் இன்றைய இளைஞர்களா? அல்லது பண்பாடுடைய இளைஞர்களா?

-Samsham Shafeek-

Post a Comment

0 Comments