வீட்டிலேயே மலாய் குல்பி செய்வது எப்படி - KALPITIYA VOICE - THE TRUTH

Thursday, August 10, 2017

வீட்டிலேயே மலாய் குல்பி செய்வது எப்படி


தேவையான பொருட்கள் :

பால் - 1 லிட்டர்
கார்ன் ஃபிளார் - 50 கிராம்
சர்க்கரை - 1 கப்
கிரீம் - 1 கப்
ரோஸ் எசென்ஸ் - 6 துளி
ஏலக்காய் பொடி - சிறிதளவு
முந்திரி, பாதாம், பிஸ்தா - விருப்பப்படி.

செய்முறை :

முந்திரி, பாதாம், பிஸ்தாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாலை காய்ச்சி பாதியளவு பாலை எடுத்து அதில் கார்ன் ஃபிளாரை சேர்த்து கட்டியாக கரைக்கவும்.

மீதமுள்ள பாலில் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

இந்த இரு பால் கரைசலையும் ஒன்றாக கலந்து மிக்சியில் போட்டு அடிக்கவும்.

அரைத்த விழுதுடன் கிரீம், ரோஸ் எசன்ஸ், ஏலக்காய் தூள், முந்திரி, பாதாம், பிஸ்தா சேர்த்து குல்பி மோல்டில் நிரப்பி ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

6 மணி நேரம் கழித்து கெட்டியானதும் எடுத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

குளுகுளு மலாய் குல்பி ரெடி. 

No comments:

Post a Comment

Pages