மருந்து அட்டைகளின் இடையில் வெற்று இடம் ஒன்று உள்ளது அதற்கான காரணம் தெரியுமா?


பொதுவாக மருந்து வாங்கும் போது அதில் கொடுக்கப்பட்டிருக்கும் மாத்திரைக்கான இடங்கள் அனைத்திலும் மாத்திரைகள் இடம் பெற்றிருக்கும். ஆனால், சில மருந்து அட்டைகளில்  10 இடங்கள் இருப்பினும், நடுவிலோ அல்லது ஒரு சில இடங்களிலோ மாத்திரைகள் இல்லாமல் இடம் காலியாக இருக்கும். அது ஏன் என்று சிந்தித்து உண்டா? அதை தெரிந்துகொள்ள ஆர்வம் இருப்பின் தொடர்ந்து படியுங்கள்!

இந்த காலி இடங்களை பார்க்கும் போது நாம் ஓரு சில சமயங்களில் இந்த கம்பெனி காரன் சரியான பைத்தியக்காரனா இருப்பான் போல என்று கேலி பேசி இருக்க கூடும். ஆனால் அதற்கு பல அறிவியல் மற்றும் செயல்பாட்டு காரணங்கள் உள்ளது. அவை என்வென்று பார்ப்போமா!

வேதியல் மாற்றம்:-
சில மருந்துகள் என்னதான் மருந்து அட்டையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தாலும் கூட அதன் வேதியல் மாற்றங்களடைய வாய்ப்புகள் இருக்கின்றன. இரண்டும் ஒரே மருந்து தான் என்ற போதும், ஒன்றுடன் ஒன்று சேரும் போது வேதியல் மாற்றம் ஏற்பட்டுவிடலாம் என்பதற்காக  சில மருந்து அட்டைகளில் இடைவெளி விடப்பட்டிருக்கின்றன.
எழுத்துரு அச்சுக்காக:-  
எல்லா மருந்து அட்டைகளின் பின்னும் அதில் இருக்கும் பயன்கள் மற்றும் மூலப்பொருட்கள், தயாரிக்கப்பட்ட இடம், உற்பத்தியாளர் விவரங்கள்  கண்டிப்பாக அச்சடிக்க வேண்டும் என்பது அரசு அறிவித்திருக்கும் நிபந்தனை. அதற்கான இடம் பற்றாக்குறை ஏற்பட கூடாது என்பதற்காக கூட சில மருந்து அட்டைகளில் காலியாக சிறிய இடைவெளி இருக்கும்.
சேதம்:
சில மாத்திரைகள் இலகுவாக உருவக்கபாடிருக்கும். அதன் காரணத்தினால் அது  எளிதாக சேதமடைய கூடிய வாய்ப்புகளும் உள்ளது. இதை தடுப்பதற்காகவும் சில இடைவெளிகளும் இருக்கும்.
மாதிரிக்காக வழங்கப்படும் இலவச மருந்துகள்:-
மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தாங்கள் புதியதாக தயாரித்த மருந்துகளை மருத்துவர்களிடம் கொடுத்து மக்களின் பயனுக்கு பரிந்துரைக்க சொல்ல சில மாத்திரைகளை இலவசமாக தருவார்கள். இந்த மாதிரி மருந்து அட்டைகளில் எல்லா இடங்களிலும் மருந்துகள் இருக்காது. குறைவாக தான் இருக்கும்.

-tamil bioscope-

Post a Comment

0 Comments