ரோஹிங்கிய மக்களுக்கு உதவ விரைந்த சீக்கிய சகோதரர்கள்


வங்காள எல்லைகளாக நிற்கும் 3 லட்சம் ரோஹிங்கிய இன மக்கள் உணவு வேண்டி காத்து இருக்க வேண்டிய தருணத்தில் , இந்தியாவில் இருந்து வங்காளம் செல்ல அனுமதி பெற்று தினமும் 35000 உணவுப் பொட்டலங்களை வழங்குவதற்கு தனது சிக்ஹ் இன தன்னார்வலர்களுடன் வந்தது கவனிக்க வேண்டிய செய்தி ஆகும்.

"இந்தியா போர் கல்சா எயிட்" என்ற அமைப்பின் இயக்குனர் அமர் ப்ரீத் சிங் என்பவர் கூறுகையில், பசியில் வாடும் குழந்தைகளை பார்க்கையில் மனம் பரிதவித்தது. கைடவிடப்பட்ட நாட்டில் அந்த குழந்தைகளின் பசியை போக்கும் விதமாக முதற்கட்ட முயற்சி எடுத்த்தோம். அரிசி மற்றும் காய்கறிகள் பெற்று உணவு தருவதற்கான முயன்றோம். மேலும் இதற்கான உதவிகளை செய்வதற்கு நிதி ஆதாரங்களை உருவாக்க பொதுமக்களிடம் கேட்கிறார்கள்


மதம் சார்ந்த கருத்து வேறுபாடுகளை களைந்து விட்டு பசியில் வெறும் வயிற்றில் தூங்கும் குழந்தைகளை முதலில் நினைப்போம் என்று கூறியது இந்திய மோடி அரசாங்கம் மியன்மார் விடயத்தில் வெட்கப்படவேண்டியதை வலியுறுத்துகிறது .

- அபூஷேக் முஹம்மத்.

Post a Comment

0 Comments