டீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் உடற்பயிற்சி அவசியம்


டீன் ஏஜ் பிள்ளைகளும் ஜிம்முக்கு சென்று ஒர்க் அவுட் பண்ணலாம். அங்கே அவர்கள் வயதிற்கேற்ப பயிற்சிகள் கொடுக்கப்படும்.


முறையான பயிற்சிகள் அற்றுப்போகும் போது வளரும் பிள்ளைகளுக்கு இன்ட்யூரன்ஸ் லெவல் குறையும். இன்ட்யூரன்ஸ் லெவலை அதிகரிக்க ஜிம் பயிற்சிகள் உதவும். ஜிம்முக்குச் சென்று தேவையான பயிற்சிகளை மேற்கொண்டால் பிள்ளைகள் பலம் பெறுவார்கள். 

நம்மிடையே வாலிப வயதினர் தான் ஜிம்முக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அப்படி ஒன்று கிடையாது. டீன் ஏஜ் பிள்ளைகளும் ஜிம்முக்கு சென்று ஒர்க் அவுட் பண்ணலாம். அங்கே அவர்கள் வயதிற்கேற்ப பயிற்சிகள் கொடுக்கப்படும். 

ஜிம்மில் பிஸிகல் ஆக்டிவிட்டி இல்லாத பிள்ளைகளுக்கு அதற்கேற்றாற் போல் பயிற்சிகள், தொப்பை உடன் இருக்கும் பிள்ளைகளுக்கென்று வயிற்றுத் தசை பயிற்சிகள் என கற்றுத்தரப்படும். வளர்ச்சிக்காக ஸ்கிப்பிங், ஜம்பிங் போன்ற பயிற்சிகள், பொதுவாக பிள்ளைகளுக்கென்று உடலை வலுவாக்கும் பயிற்சிகள், த்ரெட் மில், சைக்கிளிங் போன்ற ப்ளோர் கார்டியோ ஒர்க் அவுட் போன்றவற்றை கற்றுக்கொடுக்கப்படும். இதனால் அவர்களது எனர்ஜி லெவல் அதிகரிக்கும். அவர்கள் உடம்பின் தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படும். ஃபிட்னஸ் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். உடம்பில் ப்ளக்ஸிபிலிட்டி இருக்கும். முறையான பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் போது உடம்பில் நல்ல வளைவுத்தன்மை இருக்கும். 

தொடர் பயிற்சிகள் மேற்கொள்ளும் போது தசைகள் நல்ல வலுப்பெறும். அதுமட்டுமன்றி சில ஜிம்மில் யோகா, ஏரோபிக்ஸ் போன்ற பயிற்சிகளும் கற்றுத்தரப்படுகிறது. 

ஜிம்முக்குச் சென்று பயிற்சிகள் செய்வதும் நல்லது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஜிம்முக்கு செல்லும் பிள்ளைகளுக்கென்று ஸ்பெஷலாக டயட் லிஸ்ட் எல்லாம் கிடையாது. ஃபாஸ்ட் ஃபுட்டை தவிர்த்து ஆரோக்கிய உணவுகளை உட்கொண்டால் போதுமானது. 

Post a Comment

0 Comments