மலிவு விலை ஐபோன்: 2018-இல் வெளியிட ஆப்பிள் திட்டம்?


ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்த ஐபோன்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை தொடர்ந்து அந்நிறுவனத்தின் 2018 ஐபோன்கள் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாக துவங்கியுள்ளது.

அந்த வகையில் இந்த ஆண்டை போன்றே அடுத்த வருடமும் ஆப்பிள் நிறுவனம் மூன்று ஐபோன்களை வெளியிட திட்டமிட்டு வருவதாகவும், இதில் ஒன்று மேம்படுத்தப்பட்ட ஐபோன் X என்றும் இந்த ஸ்மார்ட்போன் ஐபோன் X பிளஸ் என அழைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 

தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் மூன்று ஐபோன்களில் ஒன்றில் எல்சிடி டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. அடுத்த தலைமுறை ஐபோன்கள் சார்ந்து ஆப்பிள் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படாத நிலையில் ஜப்பானில் இருந்து வெளியாகியுள்ள தகவல்களில் மூன்று 2018 ஐபோன்களில் ஒரு மாடலில் எல்சிடி டிஸ்ப்ளேவும், மற்ற இரண்டு மாடல்களில் ஐபோன் X போன்றே OLED டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வழக்கமான ஐபோன்களில் OLED ரக டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டு வரும் நிலையி்ல், எல்சிடி டிஸ்ப்ளேக்களை வழங்க ஆப்பிள் நிறுவனம் சாம்சங்குடன் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் மூன்று ஐபோன்களில் ஒரு மாடலில் LED டிஸ்ப்ளேவும், மற்ற இரண்டு மாடல்களில் OLED ரக டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இத்துடன் எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட ஐபோனில் 6.1 இன்ச் ஸ்கிரீன், மற்ற இரண்டு OLED டிஸ்ப்ளே கொண்ட ஐபோன்களில் 6.3 இன்ச் மற்றும் 5.8 இன்ச் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதில் 6.1 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட ஐபோனில் மெட்டல் பின்புறம் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுமட்டுமின்றி கூடுதல் பேட்டரி பேக்கப் வழங்கும் பிரத்யேக சிப் ஒன்றை ஆப்பிள் நிறுவனம் தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்பிள் சார்பில் தயாரிக்கப்படும் புதிய சிப்செட் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெளியாகும் ஐபோன்களில் பயன்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments