( M.I.M.இன்பாஸ் )
நெகிழ்வும் , மகிழ்வும் மனதிலே ஒன்று சேர்ந்த , ஒரு நாள் இன்று.
உயர்தரம் முடிந்த அன்றைய 1998 லே , தனது பதின்ம வயது பருவத்திலே சொந்த காலிலே முன்னேற முடிவெடுத்தான் ஒரு சிறுவன்.
அதுவும் புத்தளமாம் , இத்தளம் பெற்றெடுத்த ஒரு சிறுவன்.
தனது பரம்பரை தொழிலாம் தையல் தொழிலை , தொப்பி தைப்பதிலே ஆரம்பித்து , பின்பு ஆணுக்கான டவ்சரையும் முயன்று , பிறகு அபாயா துறையிலே தனக்கென தனியிடத்தை பிடித்தான்.
20 வருட தொழிலிலே ஓரளவு காலூன்றிய பின்பு, தனக்கு வர்த்தக வாய்ப்பை வழங்கிய இத்தள வாடிக்கையாளர்களுக்கு திருப்பி எதையேனும் கொடுக்க விரும்பினார்.
(அன்றைய சிறுவன் , இன்று பெரியவர் ஆனதால் - எழுத்திலும் மரியாதை).
அந்த திருப்பி கொடுத்தல் நிகழ்வே , இன்றைய நிகழ்வு.
அதுவும் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலையமாக.
இன்றைய நிகழ்வானது அவர் பெற்ற பிள்ளைகளது கிராஅத்துடன் ஆரம்பமானது .
அதனை தொடர்ந்து , 20 வருடமாக தான் கடந்து வந்த பாதையையும் , இந்த தையல் பயிற்சி நிலையத்திற்கான நோக்கத்தையும் தெளிவுப்படுத்தினார் கதாநாயகர்.
இது மனதுக்கு நெகிழ்ச்சியை வழங்கியது.
அடுத்து , கதாநாயகரை பெற்ற தாய் , தனது மகனின் வளர்ச்சி பற்றி மனமகிழ்ந்து உரையாற்றினார்.
அடுத்து , நமது ஊரின் வர்த்தக முகாமைத்துவ நிபுணரும் , உப்பு சங்கத்தின் முகாமையாளருமான சகோதரி Nazliya Cader ன் சிறப்பான உரை இடம்பெற்றது.
இவரது உரை தொழில் துறை சவால்கள் , நமது முன்னேற்றங்கள் எப்படியிருக்க வேண்டும் , Comfort Zone ல் இருந்து வெளியாக வேண்டியதன் அவசியம் என்ன ? என்பது பற்றி அமைந்ததோடு , பலரையும் சிந்திக்கவும் தூண்டியது.
இறுதி தொகுப்புரையை , சமூக ஆர்வலரும் , பல்துறை வித்தகருமான சகோதரர் Hisham Px நிகழ்த்தினார்.
இவரது பேச்சு குழுமியிருந்த அனைவரது விழிகளிலும் நீர் கசிய வைத்தது.
குடும்பங்களின் வறுமை நிலை பற்றியும் , அதனை துடைத்தெறிய பெண்கள் ஆற்ற வேண்டிய பங்களிப்புகள் பற்றியும் உணர்வு பூர்வமாக தொட்டுக்காட்டினார்.
இந்த பேச்சுக்கள் முடிய , இத்தையல் பயிற்சி நிலையத்தை ஆரம்பித்துள்ள நண்பரின் , தாயின் கரங்களினாலே , அவரது குடும்பத்தின் ஒத்துழைப்போடு, நாடா வெட்டி நிலையம் திறக்கப்பட்டது.
இன்றைய ஆரம்ப நிகழ்விலேயே , முப்பது பெண்கள் கற்பதற்கு பெயர்களை பதிந்தமையானது , வருங்காலத்தில் இந்நிலையம் ஒரு தையல் பயிற்சி கல்லூரியாக மாறும் என்பதை பறைசாற்றுகிறது என்பதிலே மாற்று கருத்தில்லை.
எவ்வித அரச நிதியோ , அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதியோ அன்றி தனது சொந்த நிதியிலே , இவ்வாறான ஓன்றை ஆரம்பித்து , இலவச பயிற்சியையும் ஆரம்பித்துள்ள நண்பரை பாராட்டுவோமாக !
அவரது பொருளாதாரம் மென்மேலும் , வளரட்டுமாக !!
ஓஹ் , சொல்ல மறந்து போனேன்...
இதனை ஆரம்பித்தவர் வேறு யாருமல்ல.
எனக்கும் , உங்களுக்கும் அதிகம் பரீட்சயமான நண்பர் அஸாரூக் அவர்களே ஆவார் - அபாயா அஸாரூக் என்றாலே புரியும்.
இவரோடு இணைந்து இன்று பணியாற்றியதிலும் , வருங்காலங்களில் பணியாற்ற இருப்பதிலும் அடியேனுக்கும் மனதுக்கு மகிழ்ச்சியே !
◆ படப்பிடிப்பு - Mnm Farhan

0 Comments