இது வரை எத்தனை பேர் இந்தப் புதிய வகை யுக்தியால் ஏமாற்றப்பட்டு இருக்கின்றீர்கள் (கவனம்)



இது வரை எத்தனை பேர் இந்தப் புதிய வகை யுக்தியால் ஏமாற்றப்பட்டு இருக்கின்றார்கள் என்று தெரியவில்லை. இனியும் எவரும் ஏமாற்றப்படாமல் இருக்கவே இதைப் பகிர்கின்றேன்..
.
40 வயது மதிக்கத்தக்க face cover பண்ணும் நசீமா, தாடி வைத்து சூரத்தாக தோற்றமளிக்கும் பிர்தெளஸ், அவர்களின் மகன் இனாஸ்(1993) மற்றும் ஒரு தங்கை கொண்ட குழு, குடும்பம் எனும் ஒரு போர்வையை போர்த்திக் கொண்டு, 
தனது மகன் இனாஸுக்கு ஒரு ஏழைப் பெண்ணை மனைவியாக தேடி கொழும்பு நகரை வலம் வருகின்றனர்..
.
பெண்ணின் குடும்பத்தாரை நேரடியாக சந்தித்து, சம்பந்தத்தில் முழு விருப்பம் இருப்பது போல் தங்களை காட்டிக்கொண்டு, பலவீனமான பெற்றோரை தம் பேச்சுத் திறமையால் ஏமாற்றி அவர்களிடமிருந்து பெறுமதியான பொருட்களை(தங்கம் மற்றும் பணம்) பெற்றவுடன் தலை மறைவாகின்றனர்..
.
இவர்களை எங்காவது அடையாளம் கண்டால் உடனே போலீஸுக்கு அறியத் தரவும்.
.
(கடந்த சில காலங்களில் இவர்கள் கொலன்னாவ, தெமட்டகொட பகுதிகளில் வசித்தும் இருக்கின்றனர்)

-அபு மன்சூர்-





Post a Comment

0 Comments