சூப்பரான ஸ்நாக்ஸ் பிரெட் மெதுவடை - KALPITIYA VOICE - THE TRUTH

Tuesday, February 26, 2019

சூப்பரான ஸ்நாக்ஸ் பிரெட் மெதுவடைதேவையான பொருட்கள் :

பிரெட் ஸ்லைஸ் (சால்ட் பிரெட்) - 10


ரவை - 3 டீஸ்பூன்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவுசெய்முறை :

வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முதலில் பிரெட்டின் ஓரங்களை வெட்டி எடுத்துவிட்டு, பிரெட்டை சிறிய துண்டுகளாக்க வெட்டி வைக்கவும். 

ஒரு பாத்திரத்தில் பிரெட் துண்டுகள், ரவை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, சுத்தம் செய்து நறுக்கி வைத்த கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கலக்கவும். 

பிறகு, அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக்கி, தட்டி, நடுவே ஓட்டை போட்டு, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.


சூப்பரான பிரெட் மெதுவடை ரெடி!!!

No comments:

Post a Comment

Pages