இது குறித்த தகவலை பிரித்தானியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் Oxfam என்ற தொண்டு நிறுவனம் வெளியிட்டு எச்சரித்துள்ளது.
ஏமனில் அதிகளவில் மக்கள் உணவு மற்றும் இருப்பிடம் கிடைக்காமல் தவிக்கும் நிலையில் 3 வயது சிறுமியை ஒரு குடும்பத்தார் செல்வந்தருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதற்கு பதிலாக சிறுமியின் குடும்பத்தார் உணவுகள் மற்றும் இருப்பிடத்தை செல்வந்தரிடம் இருந்து பெற்றுள்ளனர்.
Oxfam மேலும் விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியில், ஏமனில் உணவு பொருட்களில் விலை அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களின் வருமானம் குறைந்து வருகிறது.
இதனால் தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. முக்கியமாக 2015லிருந்து ஏமனில் போர் சண்டை அடிக்கடி நடப்பதால் உணவு பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
இது குறித்து Oxfam நிறுவனத்தின் ஏமன் நாட்டு தலைவர் முசின் சித்திக் கூறுகையில், போர் மற்றும் சண்டை பிரச்சனையால் பசி பட்டினி நிலவுகிறது.
பசியை சமாளிக்க மக்கள் மோசமான செயலை செய்கிறார்கள்.
அதாவது தங்களின் குழந்தைகளின் வாழ்க்கையை பணயம் வைக்கும் கட்டாயத்துக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர். சண்டை காரணமாக மனிதாபிமானம் பேரழிவை சந்திக்கும் என வேதனை தெரிவித்துள்ளார்.
0 Comments