சூப்பரான ஸ்நாக்ஸ் காலிஃபிளவர் வடை - KALPITIYA VOICE - THE TRUTH

Saturday, March 16, 2019

சூப்பரான ஸ்நாக்ஸ் காலிஃபிளவர் வடை


மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட காலிஃபிளவர் வடை சூப்பராக இருக்கும். இன்று இந்த வடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் 

காலிஃபிளவர் - ஒரு கப் 

கடலை மாவு - இரண்டு டீஸ்பூன்

கசகசா - கால் டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு 
உப்பு - தேவைகேற்ப
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் - ஒன்று 

செய்முறை 

கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

காலிஃபிளவரை நன்றாக சுத்தம் செய்து பூக்களாக வெட்டி வைக்கவும்.

ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து அதில் பொடியாக நறுக்கிய காலிஃபிளவர் போட்டு ஒரு கொதி வந்ததும் வடிகட்டி வைத்து கொள்ளவும்.

இன்னொரு கிண்ணத்தில் வடிகட்டிய காலிஃபிளவர், கடலை மாவு, கசகசா, கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், பச்சை மிளகாய், சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் காலிஃபிளவர் மசாலாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டி, அதில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

சூப்பரான காலிஃபிளவர் வடை ரெடி.

No comments:

Post a Comment

Pages