ஒரு விமானியை கைது செய்தோம் என்று ஏன் பாகிஸ்தான் பொய் கூறியது ? இஸ்ரேலிய விமானிக்கு அங்கு என்ன வேலை ? - KALPITIYA VOICE - THE TRUTH

Tuesday, March 12, 2019

ஒரு விமானியை கைது செய்தோம் என்று ஏன் பாகிஸ்தான் பொய் கூறியது ? இஸ்ரேலிய விமானிக்கு அங்கு என்ன வேலை ?


அண்மையில் இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் நள்ளிரவு வேளையில் குறிப்பிட்ட தூரத்துக்கு ஊடுருவி குண்டு தாக்குதல் நடாத்திவிட்டு வரும்போது பாகிஸ்தான் விமானப்படை விமானத்தினால் வழிமறிக்கப்பட்டு இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தினார்கள்.

இந்த சம்பவத்துக்கு பின்பு நாங்கள் இந்தியாவின் இரண்டு விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என்று பாகிஸ்தான் உடனடியாக அறிவித்திருந்தது.

பின்பு ஒரு விமானம் பாகிஸ்தான் பகுதிக்குள்ளும், மற்றைய விமானம் இந்திய கட்டுப்பாட்டு எல்லைக்குள்ளும் வீழ்ந்ததாக தெரிவித்தது.  

அதன்பின்பு தாங்கள் ஒரு வினானத்தை மட்டுமே சுட்டு வீழ்த்தி அதன் ஒரு விமானியை கைது செய்ததாகவும் பாகிஸ்தான் மூன்றாவது முறையாக அறிவித்திருந்தது.

அத்தோடு நின்றுவிடாமல் கைது செய்யப்பட்ட விமானியை எந்தவித நிபந்தனைகளும் இன்றி பாகிஸ்தான் உடனடியாக விடுவிப்பதாக கூறியது.   

இவ்வாறு முதலில் இரண்டு விமானங்களை வீழ்த்தினோம் என்று பாகிஸ்தான் கூறியது. பின்பு ஒன்று என்று கூறியது. ஆனாலும் பாகிஸ்தானின் முரண்பட்ட இந்த கருத்துக்களை இந்தியா மறுக்கவில்லை.

ஆனால் இந்தியாவின் இரண்டு விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது என்பதுதான் உண்மை என்ற செய்தி இப்போது பரவத் தொடங்கியுள்ளது.

குறித்த இரண்டு விமானங்களும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டு பிரதேசத்திலேயே வீழ்ந்த்ததாகவும், இரண்டு விமானங்கள் என்பதனை வெளிப்படுத்தினால், இரண்டாவது விமானியையும் அறிவிக்க வேண்டி ஏற்படும் என்பதனாலேயே ஒரு விமானி கைது செய்யப்பட்டார் என்று பாகிஸ்தான் அறிவித்ததாக பாகிஸ்தானின் முன்னாள் இராஜதந்திரிகளை மேற்கோள்காட்டி செய்திகள் கூறுகின்றது.
    
அவ்வாறாயின் மற்றைய விமானியை ஏன் மறைக்க வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது. அதுதான் சிக்களுக்குரிய விடயமாகும். அதாவது சுட்டு வீழ்த்தப்பட்ட மற்றைய இந்தியாவின் விமானத்தை செலுத்தி வந்தவர் இஸ்ரேலிய விமானி என்பதுதான் இதில் உள்ள சர்ச்சைக்குரிய விடயமாகும்.

தன்னிடம் உள்ள இரண்டு விமானிகளின் விபரங்களையும் அறிவித்தால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவடையும். அதனால் இஸ்ரேலிய விமானியையும் விடுவிக்க வேண்டி நிலை பாகிஸ்தானுக்கு ஏற்படும்.

அவ்வாறான சூழ்நிலை ஏற்பட்டால் இஸ்ரேலிய விமானியை தடுத்து வைத்து விசாரணைகள் நடாத்த முடியாது என்பதனாலேயே இஸ்ரேலிய விமானி பற்றிய செய்தியை பாகிஸ்தான் வெளிப்படுத்தாது மறைத்துள்ளது.

அத்துடன் இந்த விடயத்தில் வாய் திறந்தால் இஸ்ரேலிய விமானிக்கு இந்திய விமானப்படையில் என்ன வேலை என்ற கேள்விக்கு பதில் கூறவேண்டி ஏற்படும் என்பதனாலேயே இந்தியா வாய் மூடியுள்ளது.

தனது விமானியை பறிகொடுத்த விடயம் இஸ்ரேலுக்கு தெரிந்திருந்தும், ராஜதந்திர சிக்கலினால் எதனையும் வெளிப்படுத்த முடியாத நிலையில் இஸ்ரேல் உள்ளதாக முன்னாள் பாகிஸ்தானின் இராஜதந்திரியை மேற்கோள்காட்டி செய்திகள் கூறுகின்றது.  

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது   

No comments:

Post a Comment

Pages