தமிழர் ஹோட்டலின் தில்லாலங்கடியும் கொள்ளையடியும். மட்டுநகர் நிரோஷனின் முகநூல் பதிவு
(28.06.2019) கல்லடி சரவணா சைவ உணவகத்தில் சாப்பிட போயிருந்தேன், நேரம் மு.ப10.50 அந்த நேரத்தில் சாப்பிட உழுந்து வடை மாத்திரம் இருக்கிறது என சொல்லப்பட்டதால் சரி அதையாவது சாப்பிட்டு பசியாற்றுவோம் என எண்ணியவாறு சென்று அமர்ந்தேன். 

காய்ந்த வடைகள் ஆறு வைக்கப்பட்டன, அதில் இரண்டு வடை சாப்பிட்டு மூன்றாவதை சாப்பிடும் போது தொட்டுக்கொள்ள சம்பல் வழங்கப்பட்டது. அது தொட்டுக் கொள்ளும்படி இருக்காவிட்டாலும் மூன்று வடையால் வயிற்றை நிரப்பிவிட்டு ரூபாய் 500/- கொடுத்த எனக்கு 200/- க்கு கணக்கு காட்டி மிகுதி 300/- வழங்கப்பட்டது. 

இது குறித்து உணவினை பரிமாறியவரிடம் வினவியபோது அவர் திரு திரு என்று முழித்து விட்டு வடை ஒன்று 40/- எனவும் மீண்டும் பில்லை காசாளரிடம் கொடுக்க தரும்படி கேட்டு காசாளரிடம் கதைத்து விட்டு 120/- கணக்கு காட்டி 80/- வழங்கினார், அதன்பின் கடையில் உழுந்து வடை விலை பற்றி இன்னொரு உணவு பரிமாறுபவரிடம் வினவியபோது take away 40/- எனவும் கடையில் சாப்பிட 35/- எனவும் சொன்னார் அப்படி பார்த்தால் இன்னும் 15/- சரவணா உணவகத்தால் வழங்கப்பட வேண்டும்.

சரவணா கடை முதலாளி அவர்களே! எனக்கு 50/- 100/- திருப்பி வழங்கப்படவில்லை என்பதற்காக இந்த பதிவை இடவில்லை!!! அடேய்#கண்டவன்ட கடையில் சாப்பிட கூடாது எனும் வைராக்கியத்தோடு வாழும் என் போன்ற தமிழர்களுக்கு எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம் என்று வாழும் உன் போன்ற பிஞ்சு மூளைக்காரனுகளின் கேவலமான வியாபாரம் வேதனையளிக்கின்றது!!! 

உன் கடைபோல் நாலு தமிழ்க்கடை இருந்தால் போதும் தமிழர்களின் வியாபாரம் வெளங்கிடும்!!! 


குறிப்பு- பில் இணைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments