சவுதியில் முதன் முதலாக பொதுக் கல்வியின் செய்தித் தொடர்பாளராக பெண் - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Saturday, August 24, 2019

சவுதியில் முதன் முதலாக பொதுக் கல்வியின் செய்தித் தொடர்பாளராக பெண்


மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியா வரலற்றில் முதன் முறையாக நாட்டின் பொதுக் கல்வியின் செய்தித் தொடர்பாளராக பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

சவுதி அரேபியாவில் பொதுக் கல்வியின் செய்தித் தொடர்பாளராக இப்திசம் அல்-ஷெஹ்ரியை நியமிக்க கல்வி அமைச்சர் டாக்டர் ஹமாத் அல்-ஷேக் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாட்டின் கிழக்கு மாகாணத்தில் உள்ள பள்ளிகளுக்கு மேற்பார்வையாளராக இருந்த அல்-ஷெஹ்ரி, அமைச்சின் முதல் பெண் செய்தித் தொடர்பாளர் என்ற பதவியை வகிப்பார், பொதுக் கல்வியின் பல்வேறு கட்டங்களாக ஆறு மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொறுப்பானவர்.

இதுகுறித்து அல்-ஷெஹ்ரி ட்வீட்டரில் கூறியதாவது, பொதுக் கல்வி ஊழியர்கள், சமூகம் மற்றும் ஊடகங்களுடனான தகவல்தொடர்புகளை மேம்படுத்துவதற்கும். மக்களின் லட்சியங்கள் மற்றும் நம்பிக்கையை அடைவதற்கும், கல்வி அமைச்சகம் தொடர்பாக புதிதாக எதையும் பற்றி உங்களுக்கு அறிவிக்க நான் நியமிக்கப்பட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

உள்ளூர் ஊடகங்களின் தகவல் படி, அமெரிக்காவில் பயின்ற அல்-ஷெஹ்ரி, சவுதி அரேபியாவில் கடந்த 17 ஆண்டுகளாக ஆங்கிலம் கற்பித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages