பெண் குழந்தை பெற்றே மனைவி முத்தலாக் கூறிய கணவர் அதிர்ச்சி சம்பவம் - KALPITIYA VOICE - THE TRUTH

Saturday, August 24, 2019

பெண் குழந்தை பெற்றே மனைவி முத்தலாக் கூறிய கணவர் அதிர்ச்சி சம்பவம்


உத்தர பிரதேச மாநிலத்தில் பெண் குழந்தை பெற்றேடுத்தற்காக மனைவியிடம் முத்தலாக் கூறி, கணவர் உடனடி விவாகரத்து செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அயோத்தி, Jana Bazar பகுதியை சேர்ந்த 23 வயதான ஜாஃப்ரின் அஞ்சும் என்ற பெண்ணே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட ஜாஃப்ரின் அஞ்சும், கணவர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த யூலை 30ம் திகதி மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் குறித்து ஜாஃப்ரின் அஞ்சும் அளித்துள்ள புகாரில், திருமணமாகி ஒரு மாதத்திற்கு பின்னர், வரதட்சனை கேட்டு கணவர் தினமும் கொடுமைபடுத்தி வருகிறார்.

இந்நிலையில், இரண்டாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் கோபமடைந்த கணவர். ஆகத்து 18ம் திகதி மூன்று முறை தலாக் கூறிய உடனடியாக விவாகரத்து வழங்கிவிட்டார். எனக்கு நீதி வேண்டும் என கூறியுள்ளார்.

வழக்கு தொடர்பாக அயோத்தி கிராமப்புற எஸ்.பி சைலேந்திர குமார் சிங் கூறியதாவது, Haiderganj காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடந்து வருகிறது என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Pages