ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Saturday, August 24, 2019

ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவைநபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையிலே...


1. நபி (ஸல்) அவர்கள் பிறப்பு :20-04-570  திங்கட்கழமை,  ரபீஉல்அவ்வல் பிறை 12


2. பிறந்த இடம் : மக்கா

3. பெற்றோர் :  அப்துல்லாஹ். அன்னை ஆமீனா.

4. பாட்டானார் : அப்துல் முத்தலீப்

5. தந்தை மரணம் :  நபி (ஸல்)அவர்கள் கருவில் இருக்கும் போது

6. தாயார் மரணம் :  நபி (ஸல்)அவர்களின் ஆறு வயதில்

7. பாட்டனார் மரணம் :  நபி (ஸல்)அவர்களின் எட்டு வயதில்

8. வளர்ப்பு :  பாட்டனாருக்குப் பின் பெரிய தந்தை அபூதாலிப்

9. செவிலித் தாய்மார்கள் :  ஹள்ரத் துவைஃபா (ரளி) என்ற அடிமைப் பெண் பின்பு  ஹள்ரத் ஹலிமா (ரளி)அவர்கள்

10. பட்டப் பெயர்கள் : அல் அமீன் (நம்பிக்கைக்கு உரியவர்), அஸ்ஸாதிக்(உண்மையானவர்)

11. முதல் வணிகம் : அன்னை கதீஜா (ரளி) அவர்களின் வணிகக் குழுவில் சேர்ந்து சிரியா தேசம் பயணம்

12. முதல் திருமணம் :  அன்னை கதீஜா (ரளி) அவர்களுடன்

13. மஹர் தொகை :  500 திர்ஹங்கள்

14. திருமணத்தை நடத்தி வைத்தவர் : அபூதாலிப் அவர்கள்

15. நபி (ஸல்) அவர்கள் மனைவியர் : 

அன்னை கதீஜா (ரளி),
அன்னை ஸவ்தா (ரளி),
அன்னை ஆயிஷா (ரளி),
அன்னை ஹஃப்ஸா (ரளி),
அன்னை ஜைனப் பின்த் குஜாமா (ரளி),
அன்னை உம்முஸல்மா (ரளி),
அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரளி),
அன்னை ஜுவைரிய்யா (ரளி),
அன்னை உம்மு ஹபீபா (ரளி),
அன்னை ஸஃபிய்யா (ரளி),
அன்னை மைமூனா (ரளி),

16. ஆண் மக்கள் : 

காஸிம் (ரளி),
அப்துல்லாஹ் (ரளி), 
இப்றாஹீம் (ரளி)

இவர்கள் குழந்தைப் பருவத்திலேயே மௌத்தாகிவிட்டார்கள்

17. பெண் மக்கள் :  

ஜைனப் (ரளி),
ருகையா (ரளி), 
உம்முகுல்தூம் (ரளி),
ஃபாத்திமா (ரளி)

18. பேரர்கள் : 

அலீ (ரளி),
உமாமா (ரளி), 
முஹ்சின் (ரளி), 
ஹசன்(ரளி) 
ஹுசைன் (ரளி)

19. ஊழியர்கள் : 

பிலால் (ரளி), 
அனஸ்(ரளி), 
உம்மு அய்மன் மாரியா (ரளி)

20. அடிமை :

ஜைதிப்னு ஹாரிதா (ரளி)

21. பெருமானார் (ஸல்) அவர்களின்தகப்பனார் உடன் பிறந்தோர் : 

மொத்தம்12 பேர். அவர்களில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் ஹள்ரத்ஹம்ஜா (ரளி),
ஹள்ரத் அப்பாஸ் (ரளி)

22. பெருமானார் (ஸல்) அவர்களின்தாய் உடன் பிறந்தோர் :

மொத்தம் 6 பேர். அவர்களில்இஸ்லாத்தை ஏற்றவர்கள்

ஹள்ரத்அம்மாரா (ரளி),
ஹள்ரத்ஆத்திகா (ரளி),
ஹள்ரத்ஸஃபிய்யா (ரளி)

23. நபிப் பட்டம் கிடைத்தது :  40 – ம்வயதில் (கி.பி. 610)

24. நபிப் பட்டம் கிடைத்த இடம் : ஹிரா குகை

25. முதல் வஹீ :  'இக்ரஃ பிஸ்மி' என்ற வசனம்

26. முதல் முதலாக ஈமான் கொண்டவர்கள் : 

பெண்களில் - ஹள்ரத் அன்னை கதீஜா (ரளி), 
சிறுவர்களில் -ஹள்ரத் அலீ (ரளி),
ஆண்களில் ஹள்ரத் அபூபக்கர் (ரளி),
அடிமைகளில் - ஹள்ரத் பிலால் (ரளி)

27. முஸ்லிம்களின் முதல் ஹிஜ்ரத் :

அபிசினியாவிற்கு, 
நபித்துவம் 5 – ம்ஆண்டில், 
மன்னர் நஜ்ஜாஸி ஆட்சியில்

28. முதல் ஹிஜ்ரத் செய்தவர்கள் :

நபி (ஸல்) அவர்களின் மகள்
ருகையா (ரளி), 
மருமகன் ஹள்ரத்உஸ்மான் (ரளி) மற்றும் ஆண்கள் 11பேர், பெண்கள் 4 பேர்

29. தாயிஃப் நகரில் தவ்ஹீத் :

நபித்துவ 10 – ம் ஆண்டில்,துணையாகச் சென்றவர் ஹள்ரத் ஜைது (ரளி)

30. மக்காவில் தீனழைப்பு: 13ஆண்டுகள்

31. மதீனாவிற்கு ஹிஜ்ரத் : நபித்துவ14 – ம் ஆண்டில்

32. உடன் சென்றவர் : ஹள்ரத்அபூபக்கர் (ரளி)

33. ஹிஜ்ரத்தின் போது மறைந்திருந்த குகை :  தௌர்

34. மதீனா சேர்ந்த நாள் : ஈஸவி 25-09-622 - ல்

35. பத்ரு யுத்தம் : ஹிஜ்ரி 2, ரமளான் மாதம்

36.தொழுகைக்கு பாங்கு அறிமுகப்படுத்தப்பட்டது : ஹிஜ்ரி - 2 ல்

37. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் கஃபா கிப்லாவாக ஆக்கப்பட்டது : ஹிஜ்ரி - 2 ல்

38. உஹது யுத்தம் : ஹிஜ்ரி - 3 ல்

39. அகழ் யுத்தம் : ஹிஜ்ரி - 5 ல்

40. ஹுதைபிய்யா உடன்படிக்கை : ஹிஜ்ரி - 6 ல்

41. மது ஹராமாக்கப்பட்டது : ஹிஜ்ரி - 6 ல்

42. நபி (ஸல்) அவர்களின் புனித பல்ஷஹிதான யுத்தம் :  உஹது யுத்தம்.

43. நபி (ஸல்) அவர்களின்காலத்து போர்களில் சில :

பனூ முஸ்தலிக், 
ஹுனைன், தாயிப்,
பனூ கைனூக், 
பனூ நஸீர்,
பனூ குறைளா, 
கைபர், 
மூத்தா, 
தபூக்யுத்தங்கள்

44. மக்கா மீது படையெடுப்பு : ஹிஜ்ரி - 8 ல்

45. மிஃராஜ் :  

நபித்துவ 12 – ம்ஆண்டில், 
ரஜப் பிறை 27 திங்கட்கிழமை

46. தொழுகை கடமையாக்கப்பட்டது : மிஃராஜில்

47. ஹஜ் கடமை : ஹிஜ்ரி - 9 ல்

48. நபி (ஸல்) அவர்கள் ஹஜ்செய்தது :  ஹிஜ்ரி – 10

49. நபி (ஸல்) அவர்களின் தலையிலும் தாடியிலும் இருந்தமொத்த நரை முடிகள் :  17

50. நபி (ஸல்) அவர்கள் செய்த இறுதிப் பிரசங்கம் :  ஹஜ்ஜத்துல் விதாவில்

51. இறுதி வஹி : 110 – ம்அத்தியாயம்

52. நபி (ஸல்) அவர்கள் உலகை பிரிந்த நாள் : ஹிஜ்ரி 10, ரபீஉல்அவ்வல் பிறை 12, திங்கட்கிழமை


53. நபி (ஸல்) அவர்களின் புனித உடலை கழுவ நீர் எடுக்கப்பட்டகிணறு : 
அரீஸ் கிணறு

54. நீராட்டியவர்கள் :

ஹள்ரத் அலீ (ரளி),
ஹள்ரத் அப்பாஸ் (ரளி),
ஹள்ரத்பழ்ல் (ரளி),
ஹள்ரத் குஸீ (ரளி),
ஹள்ரத் உஸாமா (ரளி),
ஹள்ரத் ஷக்ரான் (ரளி),

ஹள்ரத் உஸ்இப்னு கௌல்....

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages