எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கு முஸ்லிம் மக்கள் வாக்களிக்க வேண்டும் - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Wednesday, September 4, 2019

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கு முஸ்லிம் மக்கள் வாக்களிக்க வேண்டும்


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கு முஸ்லிம் மக்கள் வாக்களிக்க வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
அவ்வாறு மக்கள் வாக்களிக்கும் மூன்று அல்லது நான்கு இலட்ச வாக்குகள் பெரும்பான்மை கட்சிகளை சேர்ந்த ஜனாதிபதி வேட்பாளரின் வெற்றியை தீர்மானிக்கும் என கூறினார்.
இதேவேளை கடந்த ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் மக்களின் வாக்குகளினாலேயே மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே ஹிஸ்புல்லா மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “முஸ்லிம் சமூகத்தில் ஒரு வேட்பாளர் தெரிவு செய்யப்பட வேண்டும். அவர் இலங்கையில் சகல முஸ்லிம் மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியவராக இருக்க வேண்டும். எவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தலில் பௌத்த மதத்தை சேர்ந்த ஒருவர் தான் போட்டியிடுகின்றார்.
எனவே முஸ்லிம் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த கூடியவர் யார் என்றும் நாட்டை நல்லிணக்கத்துடன் கொண்டு சொல்லக்கூடியவர் யார் என்ற விடயங்களை அறிந்து, நாட்டு மக்கள் விரும்பும் வேட்பாளருடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டு இந்த தேர்தலில் முஸ்லிம்கள் களமிறங்க வேண்டும்.
அத்தோடு சமூகம் சார்ந்து போட்டியிடும் அந்த வேட்பாளர் ஒப்பந்தம் செய்துகொண்ட பெரும்பாண்மை வேட்பாளருக்கு முதல் வாக்கினையும் இரண்டாவது வாக்கினை தனக்கும் அளிக்குமாறு கோரி பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்” என முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா கூறினார்.

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages