மாலை நேர ஸ்நாக்ஸ் அவல் வடை - KALPITIYA VOICE - THE TRUTH

Wednesday, January 8, 2020

மாலை நேர ஸ்நாக்ஸ் அவல் வடை


அவல் வைத்து உப்புமா, லட்டு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அவலில் சூப்பரான வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


அரிசி மாவு - 1/4 கப்,

ரவை (வெள்ளை) - 3 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
கொரகொரப்பாகப் பொடித்த மிளகு, சீரகம் - 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - 6 இதழ்கள்,
கேரட் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்,

பெரிய வெங்காயம் - 1.

செய்முறை


வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.மெல்லிய அவலை நன்றாகக் கழுவி (ஊற விட வேண்டாம்), நீரினை வடிகட்டி கொள்ளவும்.வடிகட்டிய அவலை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, அரிசி மாவு, உப்பு, மஞ்சள் தூள், கொரகொரப்பாகப் பொடித்த மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கேரட் துருவல், தேங்காய்த்துருவல், பெருங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.கடைசியாக ரவை சேர்த்து கலந்து கொள்ளவும்.கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டி போட்டு பொரித்து எடுக்கவும்.


சூப்பரான அவல் வடை ரெடி.

No comments:

Post a Comment

Pages