அடி உதை : முககவசம் அணியுமாறு நினைவுப்படுத்திய பெண் தாக்கப்பட்டார் (Video) - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Thursday, July 2, 2020

அடி உதை : முககவசம் அணியுமாறு நினைவுப்படுத்திய பெண் தாக்கப்பட்டார் (Video)


இந்தியாவின், நெல்லூர் பகுதியில், உள்ள அலுவலகம் ஒன்றில் முககவசம் அணியுமாறு நினைவுப்படுத்திய பெண் ஊழியரை சக ஆண் ஊழியர் தாக்கிய சம்பவம் குறித்த காணொளி இணைத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த காணொளியில் ஆண் ஊழியர் குறித்த பெண்ணை கதிரை ஒன்றினால் தாக்கியதையடுத்து கதிரை ஒருபகுதி உடைவதையும் மேலும் அவர் அவ் பெண்ணின் கூந்தலைபிடித்து மிக கொடூரமான முறையில் தாக்குவதையும் தெளிவாக அவதானிக்க முடிகின்றது.

இதே வேளை சக ஊழியர்கள் குறித்த ஆணை தடுக்க முயற்சிப்பதையும் காணொளி காட்டுகின்றது.

இந்த தாக்குதலில் குறித்த பெண் காயமடைந்ததையடுத்து ஆண் ஊழியர்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages