பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணிப்பு - இலங்கையின் அடுத்த பிரதமர் யார் ? - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Wednesday, August 5, 2020

பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணிப்பு - இலங்கையின் அடுத்த பிரதமர் யார் ?

ஆர்.ரஸ்மின்

நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அமோக வெற்றிபெறும் எனத் தெரிவித்த, பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன், 120 முதல் 135 இற்கும் இடைப்பட்ட ஆசனங்களை அந்தக் கட்சி கைப்பற்றும் எனவும் கூறியுள்ளார்.

டியூப் தமிழ் செய்தி சேவைக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

அவிட்டம் நட்சத்திரத்தில் தேர்தல் நடைபெறுவதால் அது மஹிந்த ராஜபக்ஷவுக்கே சாதகமாக இருக்கிறது.அந்தக் கட்சிக்கு பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் ஆசனங்களும் கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதேபோன்று சஜித் பிரேமதாச தலைமையிலான கட்சி 55 முதல் 65 ஆசனங்களையும், ஐக்கிய தேசிய கட்சிக்கு 15 முதல் 20 ஆசனங்களும்,தமிழ் தேசியக் கூடடமைப்பு 13 முதல் 16 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 6 முதல் 10 ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages