ஜெய் ஸ்ரீராம், என்ற கோஷத்து டன்அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டினார் பிரதமல் மோடி - KALPITIYA VOICE - THE TRUTH

Wednesday, August 5, 2020

ஜெய் ஸ்ரீராம், என்ற கோஷத்து டன்அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டினார் பிரதமல் மோடி

அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிறைவடைந்தது. இந்திய பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார்.

ஹர ஹர மகாதேவ் கோஷம்

சரியாக நண்பகல் 12.44 மணிக்கு மோதி ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டினார்.

அங்கே திரண்டிருந்த மக்கள் ஹர ஹர மகாதேவ் மற்றும் ஜெய் ஸ்ரீராம் கோஷங்களை எழுப்பி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

'ஜெய் ஸ்ரீராம், ஜெய் சியாராம்' : மோதி

ஜெய் ஸ்ரீராம், ஜெய் சியாராம் கூறி தன் உரையை தொடங்கினார் பிரதமர் நரேந்திர மோதி.

கூட்டத்தில் இருந்தவர்களை கோஷமிட கோரிய பிரதமர் மோதி, "அயோத்தியில் மட்டும் இந்த கோஷம் எதிரொலிக்கவில்லை, பிரபஞ்சம் முழுவதும் எதிரொலிக்கிறது," என்றார்.

"ஒவ்வொரு இதயமும் ஒளிர்கிறது. ஒட்டுமொத்த நாட்டிற்கும் இது உணர்வுபூர்வமான தருணம். ஒரு நீண்ட காத்திருப்பு இன்றுடன் முடிகிறது," என்றார் மோதி.

"பல காலமாக ஒரு டெண்டில் தங்கி இருந்த ராம் லல்லாவுக்கு, ஒரு பெரிய கோயில் கட்டுகிறோம். பல நூற்றாண்டுகளாக கோயில் கட்டுவதும், இடிப்பதுமாக இருந்த சுழற்சி ராமஜென்ம பூமியில் இன்றுடன் முடிகிறது."

"ராம் மந்திர் நமது கலாசாரத்தின் நவீன சின்னமாக இருக்கும். நம் பக்தி, தேசிய உணர்வின் சின்னமாக மாறும். இந்த கோயில் கோடிக்கணக்கான மக்களின் கூட்டுத் தீர்மானத்தின் சக்தியையும் குறிக்கும். இது எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கமளிக்கும்," என்று நிகழ்வில் பேசினார் மோதி.

இந்த கோயில் கட்டுவதன் மூலம், புதிய வரலாறு படைக்கப்படவில்லை, வரலாறு மீண்டும் திரும்புகிறது. ஒரு படகோட்டி, ஒரு பழங்குடி ராமருக்கு உதவியது போல, ஒரு குழந்தை கிருஷ்ணருக்குக் கோவர்த்தன மலையைத் தூக்க உதவியது போல, நம் அனைவரின் கூட்டு முயற்சியால் இந்த கோயில் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதன் சின்னம் ராமர். அனைத்தும் ராமருக்கு உரியது. ராமர் அனைவருக்கும் உரியவர் என்று கூறினார் மோதி.

மேலும் அவர், "நாம் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். மனிதகுலம் ராமரை நம்பிய போது, வளர்ச்சி இருந்தது. நாம் பாதை மாறிய மோது, அழிவின் கதவுகள் திறந்தன. நாம் ஒவ்வொருவரின் உணர்வையும் மனதில் கொள்ள வேண்டும்," என்றார்.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்:

ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டியதற்காக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமர் மோதிக்கு நன்றி தெரிவித்தார்.

அவர், "500 ஆண்டு கால போராட்டம், ஜனநாயக வழியிலும், அரசமைப்புக்கு உட்பட்டும் முடிவுக்கு வந்திருக்கிறது," என தெரிவித்தார்.

அத்வானி வீட்டிலிருந்து பார்த்து கொண்டிருப்பார்

நிகழ்வில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், "அத்வானியால் நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை. ஆனால், நிச்சயம் வீட்டிலிருந்தபடி நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருப்பார்.

சிலரை அழைக்க முடியவில்லை, சிலரால் வர முடியவில்லை. நிலைமை அவ்வாறாக இருக்கிறது. 

இதனை எல்லாம் கடந்து, இன்று மொத்த நாடும் மகிழ்ச்சியாக இருக்கும்," என்றார்.

அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: யாருக்கு அழைப்பு? யாருக்கு வருத்தம்?

500 வார்த்தைகளில் அயோத்தியின் 500 ஆண்டுகால வரலாறு அயோத்தி நகரம் எப்படி இருக்கிறது?

பெரும்பாலான கடைகள் மூடி இருக்கின்றன. நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அருகில் உள்ள தேநீர் கடைகள் மட்டும் திறந்துள்ளன.

உள்ளூர் கடைக்காரர், "இத்தனை நாள் வெறும் குடிசையில் இருந்த ராமருக்கு முறையான ஒரு வீடு கிடைத்திருக்கிறது," என தெரிவித்தார்.

அயோத்தி நகரம் எப்படி இருக்கிறது?

பல தசாப்தங்களாக ராம்ர் சிலை ஒரு டென்டில் வைக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் தற்காலிகமாக ஒரு கோயிலில் அந்த சிலை நிறுவப்பட்டது.

அயோத்தி சாலைகள் அனைத்தும் பூவால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

மஞ்சள் மற்றும் காவி வண்ணத்தில் வீதி முழுவதும் வண்ணம் பூசப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்புக்கான அனைத்து நடைமுறைகளும் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் பின்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், பெருங்கூட்டத்தை காண முடிகிறது. யாரும் முகக்கவசம் அணியவில்லை. சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை.

No comments:

Post a Comment

Pages