புத்தளத்தில் பறிமுதல் செய்யப்பட்ட "JANAWASA ESTATE" தென்னங்காணிகளின் இன்றைய நிலை - KALPITIYA VOICE - THE TRUTH

Sunday, December 20, 2020

புத்தளத்தில் பறிமுதல் செய்யப்பட்ட "JANAWASA ESTATE" தென்னங்காணிகளின் இன்றைய நிலை


 எமது உறவுகளிடமிருந்து 1972யில் பறிக்கப்பட்ட புத்தளம் 1000 ஏக்கர் "JANAWASA ESTATE" ஜனவாச தோட்டம். JEDB.


அன்று 700,000 தேங்காய். இன்று வெறும் 900 தேங்காய்.

எமது புத்தளம் தனவந்தர்களின் சொத்துக்களாக இருந்த பல ஆயிரக்கணக்கான ஏக்கர் தோட்டங்கள் 1972ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் அபகரிக்கப்பட்டன. இவை பின்னர் JEDB க்கு 53 வருட குத்துகைக்கு கொடுக்கப்பட்டு, இவர்கள் அந்த குத்துகை பணத்தை இதுவரை சரியாக செலுத்தவுமில்லை.

இன்று புத்தளத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் ஜனவாச தோட்டம் ஒரு காலத்தில் ஒரு முனையில் இருந்து தேங்காய் ஆய்வதற்கு ஆரம்பித்தாள் மறு முனையில் ஆய்ந்து முடியும் போது, ஆரம்பித்த இடத்திற்குரிய திகதி மீண்டும் வந்துவிடும் அளவிற்கு சிறப்பாக பராமரித்தனர்.

எனது சிறிய ஆய்வின்படி குவைத் வைத்தியசாலை அருகிலிருக்கும் 1000 ஏக்கர் "JANAWASA ESTATE" ஜனவாச தோட்டம், முறையான பராமரிப்பிலில்லை.

அங்கு காவலுக்கு 8 குடும்பங்கள் இருக்கின்றனர். அவர்களுக்கே அங்கு ஆய்ந்தெடுக்கும் 900 தேங்காய் போதாமையிலுள்ளது. 1000 ஏக்கரில் 100 ஏக்கர் நிலம், இடம்பெயர்ந்த மக்களுக்கு கொடுக்கப்பட்டுவிட்டது, மீதி 900 ஏக்கரில், 900 தேங்காய் ஆய்கின்றனர். அதாவது ஒரு ஏக்கருக்கு 1 தேங்காய். 600 ஏக்கரில் முந்திரி மரம் நடப்பட்டுள்ளது, ஆனால் வருடத்திற்க்கு 3000kg அறுவடை, அதாவது 1 ஏக்கருக்கு 5 kg.

இது பாரிய நஷ்டத்தில் செல்கின்றது, எனவே இதனை அரசிடமிருந்து பெற்று மக்களுக்கு வீட்டு திட்டமோ அல்லது விவசாய நடவடிக்கைகளுக்கோ கொடுக்கமுடியுமாயின், எமதூருக்கு பெரும் பொருளாதார பிரயோசனத்தை தரக்கூடும்.

இன்று நகர சபை எல்லைக்குள்ளிருக்கும் விசாலமான இடம் இது மாத்திரமே. அதிகமான வீட்டுத்திட்டங்கள் எமக்கு கிடைக்கின்றன. ஆனால் இடமின்றி அவைகள் வேறு இடங்களுக்கு திரும்பிவிடுகின்றன. எம்மூரில் வீட்டுத்தேவையுடையோர் அதிகமாக வாழ்கின்றனர். இளைஞ்சர்களுக்கும் தொழில்வாய்ப்பை ஏட்படுத்தலாம்.

எல்லா இனமக்களுக்கும் இதனை பாரபட்சமின்றி பிரித்து வழங்கமுடியுமாயின், இது சிறப்பாக இருக்கும்.

எனது முன்மொழிவுகளையும் உரிய அதிகாரமிக்கவர்களுக்கு முன்மொழிந்துள்ளேன்.

MHM ரஸ்மி
நகர சபை உறுப்பினர்
புத்தளம்.

No comments:

Post a Comment

Pages