கொரோனாவை தவிர்த்து இன்னும் 2 பேரழிவுகள் எச்சரிக்கு பில்கேட்ஸ் - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Saturday, February 6, 2021

கொரோனாவை தவிர்த்து இன்னும் 2 பேரழிவுகள் எச்சரிக்கு பில்கேட்ஸ்

 


கோடீஸ்வரரும், மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ், இன்னும் இரண்டு பேரழிவுகளுக்கு மனிதர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இப்போது உலகின் பல்வேறு நாடுகளில் பல லட்சம் உயிர்களை எடுத்து வருகிறது.

இப்படிப்பட்ட வைரஸ் குறித்து கடந்த 2015-ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கணித்திருந்தார்.

அவரின் அந்த வீடியோ இந்த கொரோனா காலகட்டத்தில் அதிகமாக பகிரப்பட்டது. கடந்த 2015-ஆம் ஆண்டிலேயே உலக நாடுகளை பில்கேட்ஸ் எச்சரித்த போதும், அதை பெரிதாக எடுத்து கொள்ளாததன், விளைவை இன்று உலக நாடுகள் அனைத்தும் சந்தித்து வருகின்றன.

இந்நிலையில், தற்போது பில்கேட்ஸில், 5 ஆண்டுகளுக்கு முன்பே எப்படி கொரோனா போன்றதை கணித்தீர்கள் என கேட்ட கேள்விக்கு, பில்கேட்ஸ், சுவாச வைரஸ்கள் ஒவ்வொன்றாக தோன்றுகின்றன.

இவை மிகவும் ஆபத்தானவை. எபோலா போன்ற தொற்றுக்காக நீங்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போதே பிறருக்கும் பரவி விடுகிறது.

மனிதர்கள் தயாராகாத வேறு பேரழிவுகள் ஏதேனும் இருக்கிறதா என்ற கேள்விக்கு, பில்கேட்ஸ், இரண்டு பேரழிவுகள் இருப்பதாக குறிப்பிட்டார்.

முதலில் பருவநிலை மாற்றம். கொரோனாவில் இறந்தவர்களைக் காட்டிலும் ஒவ்வொரு ஆண்டும் இனி பருவநிலை மாற்றத்தால் கூடுதலான உயிரிழப்புகள் ஏற்படும். அடுத்த பேரழிவை பற்றி பேசுவதை மக்கள் விரும்ப மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages