ஆங் சான் சூ கியின் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைமை அலுவலகம் இராணுவத்தினால் உடைப்பு - KALPITIYA VOICE - THE TRUTH

Wednesday, February 10, 2021

ஆங் சான் சூ கியின் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைமை அலுவலகம் இராணுவத்தினால் உடைப்பு

 


மியன்மாரில், திருவாட்டி ஆங் சான் சூ கியின் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைமை அலுவலகம் அந்நாட்டு இராணுவத்தினால் சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.


பல இராணுவ அதிகாரிகள் வலுக்கட்டாயமாக அலுவலகத்துக்குள் நுழைந்ததாகக் கூறப்பட்டது. உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணியளவில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மீண்டும் ஜனநாயக முறை நடப்புக்கு வர வேண்டும் என்று வன்முறையை ஆர்ப்பாட்டக்காரர்கள் கையில் எடுத்த சில மணி நேரத்தில் கட்சியின் தலைமையகம் சோதிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களாக ஆர்ப்பாட்டம் தொடர்கிறது. கூட்டத்தைக் கலைக்க ரப்பர் தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டன. குறைந்த நான்கு பேர் அதனால் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதாகத் தகவல் அளிக்கப்பட்டது.

அவர்களில் இருவரின் உடல் நிலை மோசமாய் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஐந்து பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடக்கூடாது என்ற புதிய விதிமுறையை மீறியதற்காகச் சுமார் 200 பேருக்கும் மேல் கைதுசெய்யப்பட்டனர்.  

No comments:

Post a Comment

Pages