நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் திறக்கும் திகதி அறிவிப்பு - KALPITIYA VOICE - THE TRUTH

Wednesday, February 10, 2021

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் திறக்கும் திகதி அறிவிப்பு

 


நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி முதல் முழுமையாக திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர ஏனைய பாடசாலைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.

மேல் மாகாணணத்தின் கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டத்தில் பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி குழுவின் பரிந்துரைகள் பெறுவதற்கு கல்வி அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சுகாதார அதிகாரிகளிடம் தகவல் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் சுகாதார அதிகாரிகளின் அனுமதி கிடைத்தவுடன் மார்ச் மாதம் 15ஆம் திகதி மேல் மாகாணத்தின் பல பாடசாலைகள் ஆரம்பிக்க முடியும்.

அதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் 80 பாடசாலைகள் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனைய பாடசாலைகள் திறப்பதற்கு எவ்வித தடைகளும் இல்லை.

எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 11ஆம் திகதி வரையில் சாதாரண தர பரீட்சைகள் இடம்பெறவுள்ளன. அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.

பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் மார்ச் மாதம் 15ஆம் திகதி முதல் நாட்டில் உள்ள சகல பாடசாலைகளும் சுகதார அதிகாரகளின் அனுமதியின் கீழ் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Pages