முஸ்லிம் திருமணச் சட்டத்தால் முஸ்லிம் பெண்களுக்கு பாரிய அநீதி - முஸ்லிம் பெண்களே அமைச்சரிடம் முறைப்பாடு - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Wednesday, February 10, 2021

முஸ்லிம் திருமணச் சட்டத்தால் முஸ்லிம் பெண்களுக்கு பாரிய அநீதி - முஸ்லிம் பெண்களே அமைச்சரிடம் முறைப்பாடு

 - இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி தெரிவிப்பு


முஸ்லிம் திருமணச் சட்டத்தால் முஸ்லிம் பெண்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்படுவதாக முஸ்லிம் பெண்களே எம்மிடம் முறைப்பாடுகளை முன்வைப்பதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோப்புள்ளே தெரிவித்தார்.

பாராளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் ரதன தேரரால் 27/2 கீழ் முஸ்லிம் சட்டங்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியை தொடர்ந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

எமது நாட்டில் 18 வயது வரையான சிறுவர்கள் அனைவரின தும் கல்வி உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். சர்வதேச சிறுவர் உரிமை பிரகடனத்தில் நாம் கையெழுத்திட்டுள்ளோம்.

அதனால் இனம்,மதம்,குல பேதங்கள் கடந்தது அனைத்து சிறுவர்களுக்கும் கல்வி கற்றும் சந்தர்த்தை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

பெண்கள் தொடர்பிலான சர்தேச சீடா பிரகடனத்திலும் கையெழுத்திட்டுள்ளோம். அதன் பிரகாரம் பெண்கள் தொடர்பில் இனம், மதம் மற்றும் குல பேதங்கள் பார்க்கக் கூடாது.

ஒரே சட்டத்தின் கீழ் அனைத்து பெண்களுக்கும் தமது உரிமைகளை உறுதிப்படத்த வேண்டுமென்ற கருத்தை முன்வைத்துள்ளோம்.

முஸ்லிம் திருணமச் சட்டத்தால் பெண்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்படுவதாக முஸ்லிம் பெண்கள் எம்மிடம் முறைப்பாடுகளை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.

ஷம்ஸ் பாஹிம்,

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages