இஸ்ரேலுக்கு எதிரான அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு. - KALPITIYA VOICE - THE TRUTH

Monday, February 8, 2021

இஸ்ரேலுக்கு எதிரான அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு.

 


பாலஸ்தீன நாடு தனது நீதி அதிகார வரம்புக்கு உட்பட்டவை: இஸ்ரேலுக்கு எதிராக வரலாற்றுப் பூர்வமான அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் இன்று பாலஸ்தீனம் தனது நீதி அதிகார வரம்புக்கு உட்பட்டவை எனத் தீர்ப்பளித்துள்ளது.

அதன் மூலம், இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள, மேற்குக் கரை, ஜெருசலம், காஸா போன்ற பாலஸ்தீன பகுதிகளில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்த புலனாய்வை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் நடத்தும்.

இந்த தீர்ப்பை உடனடியாக நிராகரித்த அமெரிக்கா, இஸ்ரேல் அனைத்துலக நீதிமன்றத்தின் உறுப்பு நாடாக இல்லை. ஆகவே, அதன் அதிகாரம் இஸ்ரேலைக் கட்டுப்படுத்தக் கூடாது என கூறியது.

பாலஸ்தீன ஆணையம், அனைத்துலக நீதிமன்றத்தின் உறுப்பினராக நீடிக்கிறது. ஆனால், இஸ்ரேல் இன்னும் அதில் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு கட்டுப்படமாட்டோம் என்ற இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ இந்த தீர்ப்பு ஓரவஞ்சமானது என்றார்.

விரைவில் இது சம்பந்தமாக அமெரிக்கா மேல்முறையீடு செய்யும் என இஸ்ரேலிய தகவல்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment

Pages