கொவிட் 19 : பன்னாட்டு சுதேச மருத்துவ தற்காப்பு மற்றும் சிகிச்சை முறைகள்..! - KALPITIYA VOICE - THE TRUTH

Saturday, June 5, 2021

கொவிட் 19 : பன்னாட்டு சுதேச மருத்துவ தற்காப்பு மற்றும் சிகிச்சை முறைகள்..!

 


கொவிட் 19 ஏற்கனவே இருக்கின்ற கொரொனா வைரஸின் விருத்தியுற்ற அல்லது விருத்தி செய்யப்பட்ட ஒரு நுண்ணுயிர் மாதிரி தான்.


செயலிழந்த/ செயலிழக்கச் செய்யப்பட்ட வைரசு மாதிரிகளை தடுப்பூசிகளாக உட்செலுத்தி நோயெதிர்ப்பு சக்தியை செயற்கையாக ஏற்படுத்தும் முறை விஞ்ஞான பூர்வமாக பரீட்சிக்கப்பட்டு சர்வதேச தரநிர்ணயங்களில் அறிமுகம் செய்யப்படுவதால் பாதுகாப்பான சட்ட வலுவுள்ள அலோபத்தி முறையாக வலியுறுத்தப் படுகிறது.

எமது பிரதான சுகாதார வைத்திய சேவைகளும் அலோபத்தி ஆங்கில வைத்திய ஆய்வுகளை கற்கைகளை தராதரங்களை முதன்மைப்படுத்தி இருப்தனால் நாம் அத்தகைய சேவைகளை சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்கின்றோம்.

என்றாலும் எமது உடலில் இயற்கையாக நோயெதிர்புச் சக்தியை அதிகிரிக்கின்ற உணவு பாணங்கள் பக்க விளைவுகளற்ற மூலிகை பாணங்கள் கசாயங்கள் என்பவற்றை எமது சுதேச வைத்தியத்துறையும் அறிமுகம் செய்துள்ளதனை நாம் அறிந்து வைத்துள்ளோம்.

அந்த வகையில் அத்தகைய இயற்கை மூலிகை வேதிப்பொருள் வைத்தியத் துறைகளான சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம், யூனானி வைத்தியம், ஹோமியோபதி வைத்தியம், அக்யூபஞ்சர் வைத்தியம் போன்ற துறைகளில் இத்தகைய வைரஸ் பக்டீரியா நூண்ணுயிர்களுக்கான எதிர்ப்பு சக்தி மற்றும் சிகிச்சை முறைகள் இருக்கத்தான் செய்கின்றன, அவை வீட்டு வைத்தியங்களாக காலாகாலமாக இருந்தும் வருகின்றன.

தெற்காசிய நாடுகளில் எமது அன்றாட சமையலில் நாம் உபயோகிக்கின்ற, கொத்தமல்லி, ஜீரகம், மிளகு, கடுகு, வெந்தயம், மிளகாய், கராம்பு, ஏலக்காய், பட்டை, பெருங்காயம், இஞ்சி, பூண்டு, வெங்காயம், புளியங்காய், கொரக்காய், சாதிக்காய், கறிவேப்பிலை என எல்லாமே மருத்துவக் குணங்களை கொண்டிருப்பதோடு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பவை தான்.

அதைபோன்றே கீறை வகைகள் தேசிக்காய், தேங்காய் உற்பட அனைத்து காய்கறிகளும் பழவகைகளும் எமது சுகவாழ்வில் பங்களிப்புச் செய்கின்றன.

தேன், கருஞ்சீரகம், சாதிக்காய் போன்றவை அதிக மருத்துவக் குணங்களை கொண்டுள்ளன, பாணி தோடம் பழம், புளி தோடம்பழம் அந்த சிற்றிக் இனத்தைச் சேர்ந்த பழ வகைகள் என்பன நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லன.

கராம்பு எண்ணெய், கருஞ்சீரக எண்ணெய், வேப்பெண்ணேய், நல்லேண்ணெய் என பல மருத்துவக் குணங்கள் உள்ள எண்ணெய் வகைகள் வைரஸ் பக்றீரியா உற்பட கிருமித் தொற்று சிகிச்சைகளுக்காக பயன்படுத்தப் படுகின்றன,, குறிப்பாக ஆரபு நாடுகளில் கராம்பு, கருஞ்சீரக எண்ணேய் கலந்த சுடுநீராவி கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது.

வாதம், பித்தம், சிலேட்டுமம் எனும் மூன்று பிரதான நோய் மூலங்களையும் கவனத்திற் கொண்டே எம் முன்னோர்கள் சமையற்கலையை வளர்த்துள்ளார்கள், கொவிட் 19 சிலேட்டுமம் எனும் நோய் மூலத்துடன் சுவாசத் தொகுதியுடன் தொடர்பு படுகிறது.

அதனால் தான் சாதாரண தடிமன், சுரம் காய்ச்சல், இருமல் மார்புச்சளி போன்ற வைரஸ் கோளாறுகள் ஏற்படுமிடத்து மூலிகை கசாயங்களை குடிப்பதும், நன்றாக உடலை மூடி உள்ளிருந்து மூலிகை நீராவி பிடிப்பதும், இஞ்சி கலந்த சூடான பிலேன்டீ குடிப்பதும் வீட்டு வைத்தியங்களாக இருந்து வந்திருக்கின்றது, அவற்றை கடைப்பிடிக்குமாறு சுதேச வைத்தியத்துறையினர் தற்போதைய சூழ்நிலையிலும் வலியுறுத்துகிறார்கள்.

அந்த வகையில் வருமுன் காப்பு , தனிமைப்படுத்தல் காலங்களில் அவற்றை நாம் அங்கீகாரம் பெற்ற துறைசார் வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளில் கைக்கொள்வதில் தவறில்லை, சிறந்ததும் கூட.

என்றாலும் நோய் அறிகுறிகள் தென்படுமிடத்து உரிய வைத்திய பரிசோதனைகளை செய்வதற்கும் தீவிர அதிதீவிர சிகிச்சைகளை வழங்குவதற்கும் எமது நாட்டில் அங்கீகாரம் பெற்ற தராதரம் வாய்ந்த சுதேச வைத்தியத்துறை சிகிச்சை நிலையங்கள் இல்லை என்பதனையும் நாம் மனதில் கொண்டு பொது சுகாதார அறிவுறுத்தல்களை அவ்வாறான நிலைகளில் கடைப்பிடிக்க வேண்டும்.

இந்தப் பதிவை ஒரு சதகதுல் ஜாரியாவாக பகிர்ந்திருக்கிறேன், நீங்களும் இதுபோன்ற பயனுள்ள வைத்தியக் குறிப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் எம் அனைவரையும் இந்த கொள்ளை நோய்களில் இருந்தும் சோதனைகளில் இருந்தும் பாதுகாப்பானாக, நோயுற்றுள்ளவர்களுக்கு நல்லாரோக்கியத்தை வழங்குவானாக, மரணிக்கும் நல்லடியார்களை ஷஹீதுகளாக அங்குகரித்துக் கொள்வானாக!

உங்கள் ஆத்மார்த்தமான துஆக்களில் எமது பெற்றார், உடன் பிறப்புக்கள், மனைவி மக்கள், உற்றார் உறவினர் ஆசான்கள் அன்பிற்குரியவர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
✍🏻
20.06.2021

No comments:

Post a Comment

Pages