பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் எனும் செய்தியின் தொடர்பான கல்வி அமைச்சின் அறிவிப்பு - KALPITIYA VOICE - THE TRUTH

Sunday, June 6, 2021

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் எனும் செய்தியின் தொடர்பான கல்வி அமைச்சின் அறிவிப்பு

 


ஜூன் 29 ஆம் திகதி முதல் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவிக்கையில், பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை.

சுகாதார பிரிவின் ஊடாக பெற்றுக்கொள்ளப்படும் பரிந்துரையை கருத்திற்கொண்டு பாடசாலைகளை திறப்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.  

No comments:

Post a Comment

Pages