2நிமிடம் ஒதுக்கி இதனை முழுமையாக படியுங்கள்.. பெண் யார் என புரிந்து கொள்வீர்... - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Saturday, June 5, 2021

2நிமிடம் ஒதுக்கி இதனை முழுமையாக படியுங்கள்.. பெண் யார் என புரிந்து கொள்வீர்...

 


நடத்தையில் சந்தேகம் கொண்டு மனைவியை அடிப்பவனும் குடித்துவிட்டு கண்ணு மண்ணு தெரியாமல் உதைப்பவனும் தன்னை விட அவள் நன்றாக சம்பாதிக்கிறாள் என்ற ஈகோவில் துன்புறத்துபவனும் சொத்துக்காக பெற்ற தாயை முதியோர் இல்லத்தில் விடுபவனும் வயது வித்தயாசமன்றி கொடூரமாக கற்பழித்து கொல்பவனும் ஒவ்வொருத்தனும் தயவு செய்து பெண்களின் மறுபிறவியான பிரசவ அறைக்குச் சென்று திரும்ப வர வேண்டும்

கணவன் முன் கூட அந்த கோலத்தில் இருக்க முடியாத நிலையில் ஒற்றை துணியில் உடல் மறைப்பு அடுத்ததாய் உடல் குறுக்கில் இரண்டாய் மடித்து வளைக்கப்பட்டு முதுகுத்தண்டில் கொஞ்சம் கொஞ்சமாய் குத்தப்படும் ஸ்பைனல் அனெஸ்தீசியா என்னும் அரக்கன்...
கொடூரமாக விளக்கப்படும் அல்லது காமமாக பார்க்கப்படும் யோனியின் பிளவை பிதுக்கி அதிசயமாக பார்க்கப்படும் மார்பின் மத்தியை அழுத்தி அழுத்தி புஷ் அப் புஷ் அப் என்னும் மருத்துவரின் கூப்பாடு....

அப்போது வலப்பக்க இடுப்பில் சுரீரென்ற குத்தல் இடைவெளி விட்டு மீண்டும் இடைவெளி விட்டு மீண்டும் இப்படியே தொடர்ந்து நடு வயிறு வலி ஆரம்பிக்கும் போது குழந்தை வரத்தொடங்கும் வலி...

கால் இரண்டையும் விரித்து வைத்துக்கொண்ட அந்த வேளையில் வலி முதுகுத்தண்டை தாக்க ஆரம்பித்திருக்கும் எப்படி என்றால் கத்தியை எடுத்து முதுகுதண்டின் டிஸ்க்களுக்கு இடையில் சொருகினால் எப்படி இருக்கும் அப்படியான வலி....

பிறப்புறுப்பு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் விரிவடையாத சூழலில் இருக்கும், கத்தரிப்பான் தோற்றத்தில் தேங்காய் உரிக்கும் உபகரணம் பார்த்து இருக்கிறிர்களா?

தேங்காயில் அதன் கூர்மையான முனை கொண்டு ஒரு குத்து குத்தி இரண்டாக பிளக்க வேண்டும்…

அதே மாதிரி ஒரு உபகரணம் கொண்டு பிறப்புறுப்பில் செலுத்தி அதன் கைப்பிடியை விரித்து ஒரு திருக்கு.....

குழந்தையை பார்க்கனும்னா நல்லா முக்கு னு ஒரு செல்ல அதட்டல் அப்போ வரும் ஒரு வெறி..

நரம்புகள் முறுக்கி உடம்பின் ஒட்டுமொத்த சக்தியையும் திரட்டி ஓரிடத்தில் குவித்து முப்பது நொடி அளவில் நீண்ட முக்குதல்.. பிறப்புறுப்பை கிழித்துக்கொண்டு குழந்தை வந்து விழும்.

மறு ஜென்மம் போயி வந்த ஒரு வாழ்க்கை.. உதடு எல்லாம் கடித்து முகம் வெளிறி போதும்டா சாமி இன்னொரு பிறவினு அழும் வேளையில் பிஞ்சு குழந்தையின் முகம் பார்க்கையில் அத்தனையும் மறந்து போயி.......

அதன் பின் அந்த தையல் போட்டபின்‌ ஒவ்வொரு தடவை சிறுநீர் போகும் போதும் வலி இருக்கே அது மரண வலி .. சில சமயம் உட்கார கூட முடியாது
படிக்கும் போதே மனது கண்ணீரில் நனைகிறதா.. இதை தாங்கும் பெண் ,
உண்மையில் தலையில் தூக்கி வைத்து கொண்டாட படவேண்டிய ஓர் ஜுவன் அவளை போயி அடித்து துன்புறுத்தி வாட்டி வதைத்து கற்பழித்து கொன்று அட போங்கடா ..... !

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages