பயண கட்டுப்பாட்டுக்கு மத்தியில் அத்தியாவசிய சேவைக்கு செல்லும் வாகனங்களுக்கு விசேட Sticker - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Sunday, June 6, 2021

பயண கட்டுப்பாட்டுக்கு மத்தியில் அத்தியாவசிய சேவைக்கு செல்லும் வாகனங்களுக்கு விசேட Sticker

 


பயண கட்டுப்பாட்டுக்கு மத்தியில் அத்தியாவசிய சேவைக்காக பயணிக்கும் வாகனங்களுக்கு நாளை முதல் விசேட ஸ்டிக்கர் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள முழு காலப் பகுதிக்கும் இது செல்லுபடியாகும் வகையில் வழங்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய நாளைய தினம் அத்தியாவசிய சேவைக்காக கொழும்பிற்கு வரும் வாகனங்கள் ஓரிடத்தில் தகவல்களை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதால் தாமதம் ஏற்படக்கூடும்.

இது தொடர்பிலான ஏனைய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவைக்காக செல்லும் நபர்கள் முகங்கொடுக்க வேண்டிய இன்னல்களை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இந்த ஸ்டிக்கர் செய்முறை நாளை காலை முதல் செயல்படுத்தப்பட உள்ளது.      

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages