இச்சிறுமியின் சிகிச்சைக்காக உதவிடுவீர் - KALPITIYA VOICE - THE TRUTH

Thursday, July 15, 2021

இச்சிறுமியின் சிகிச்சைக்காக உதவிடுவீர்


 சீத் ஆகிய நானும் எனது தந்தை வழி மாமியின் மகளாகிய சம்ஹாவும் 2019.03.08 ஆம் திகதி திருமண பந்தத்தில் இணைந்தோம். வெளிநாட்டில் வேலை செய்து வந்த நான் விடுமுறை பெற்று வந்து திருமணம் செய்து விட்டு 45 நாட்களுக்குள் மீண்டும் வேலைக்காக வெளிநாடு சென்று விட்டேன். அங்கு போய் சில வாரங்களில் நான் தந்தையாகப் போகிறேன் என்ற செய்தி என் காதில் விழுந்ததில் இருந்து குழந்தை பற்றிய கனவுகளோடும் எதிர்பார்போடும் நாட்கள் கடந்தன.

என் குழந்தை இவ்வுலகைப் பார்ப்பதற்கான நேரம் நெருங்கவே என் ஆவலும் அதிகரித்துக் கொண்டே போனது. ஒரு வழியாக 10 நாட்கள் விடுமுறை பெற்றுக் கொண்டு 2019.12.23 அன்று என் குழந்தையை பார்க்கும் ஆவலுடன் நாட்டுக்கு வந்தேன். என்ன ஆச்சரியம், ஏமாற்றமின்றி என் குழந்தையும் என்னைப் பார்க்க 2019.12.27 அன்று பிறந்தால். அவளுக்கு விதாத் என்று பெயர் சூட்டினேன். வெறும் ஏழு நாட்களை குழந்தையுடன் கழித்து விட்டு பிரிய மனமின்றி கண்ணீருடன் மீண்டும் அபுதாபி நோக்கி பயணமானேன், வாழ்வாதாரத்தைத் தேடி.
அங்கு போய் அடிக்கடி போனில் குழந்தையைப் பார்த்து வந்த நான் நேரில் என் விதாத் குட்டியை கானும் நாளை ஆவலாக எதிர்பார்த்திருந்தேன்.அடிக்கடி பிள்ளைக்கு சுகவீனம் ஏற்பட்டது. என்றாலும் அது சாதாரணமாக எல்லோருக்கும் போல் ஏற்படுவது தானே என்று நினைத்தோம். ஆனால் பிள்ளையின் இயக்கத் திறனும் வளர்ச்சியும் சம வயதுக் குழந்தையைவிட குறைந்து கொண்டே போகிறது என்பதை குடும்பத்தினர் உணர ஆரம்பித்தனர்.தாய்ப் பாசத்தினால் என் மனைவி பிறர் குழந்தைக்கு குறை சொல்வதை ஏற்றுக் கொள்ள மறுத்தால். அதிகமான நேரம் குழந்தையுடன் அறைக்குள்ளேயே கழித்தாள்.சனம் கூடும் இடங்களுக்கு போவதைத் தவிர்த்தாள்.ஆனால் அவளுக்குத் தெரியவில்லை குழந்தைக்கு ஏற்பட்டிருப்பது தெலசீமியா எனும் குருதிக் குறைபாடு நோய் என்று.
ஆறு மாதங்கள் கடந்தன. பிள்ளையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இல்லை. ஈற்றில் என் மனைவியும் பிள்ளையிடம் ஏதோ நோய் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டு வைத்தியரிடம் சென்று பரிசோதிக்க சம்மதித்தாள். பிள்ளையை பரிசீலித்த வைத்தியர் உடனே ஒரு Blood Report எடுத்துவரச் சொன்னார்.Report கைக்குக் கிடைக்க முன்னமே அதன் முடிவை call பன்னி அறிந்து கொண்ட Doctor பிள்ளையின் குருதியின் HP மட்டம் 4 ஆக குறைந்திருப்பது அவள் உயிருக்கே ஆபத்தானது எனக்கூறி குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு வேண்டினார்.
இதனையறிந்த என் நெஞ்சம் பதறிப் போனது. செய்வதறியாது வைத்தியசாலையின் அறிக்கைக்காக இறைவனைப் பிரார்த்தித்தவாறு காத்திருந்தேன்.இறைவன் மனிதனை சோதிப்பான் என்பதை அறிந்திருந்த நான் எங்களை இப்படி சோதிப்பான் என்று சற்றும் எதிர்பார்கவில்லை. ஆம், எம் குழந்தை மயிரிழையில் உயிர்தப்பியதென்றும் அவளுக்கு Thalassaemia Major என்ற நோய் உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர். குழந்தைக்கு மாதாமாதம் இரத்தம் மாற்றவேண்டும் என்றும் நீண்ட காலம் குழந்தை உயிர்வாழ்வதை உறுதிப்படுத்த முடியாதென்றும் தெரிவித்த வைத்தியர்கள் இதற்கு இருக்கும் ஓரே தீர்வு Bone Marrow Transplant என்று கூறினர். ஆரம்பத்தில் இது எதுவும் எனக்குப் புரியவில்லை ஆனால் இந்த நோய் பற்றி இணையத்தில் தேடி தெரிந்து கொண்டேன்.
வெளிநாட்டில் இருந்த நான் நடைப்பிணம் போல் ஆனேன்.என்னால் வெளிநாட்டில் இருக்கவும் முடியவில்லை நாட்டுக்கு வரவும் முடியவில்லை.ஒரு வழியாக வேளையை விட்டு நாடு வர அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியான போது மீண்டும் விமானநிலையம் பூட்டு....வெந்த புண் மேல் வேலைப் பாய்ச்சியது போல வேலையின்றி பல மாதம் அறைக்குள் அடைந்து இருக்க வேண்டியதாயிற்று.
இறுதியாக இறையருளால் 13.12.2020 அன்று தாயகம் திரும்பி இன்று வரையும் பிள்ளையின் சிகிச்சை விடயமாக முயற்சி செய்து கொண்டு இருக்கின்றேன்.என்னுடைய DNA யும் என் மனைவியின் DNA யும் பிள்ளையின் DNA உடன் 50% பொருந்தியது. பல பரிசீலனைக்குப் பின் என்னுடைய Bone Marrow வை மகளுக்கு வைக்கலாம் என டாக்டர் கூறினார். ஒரு பக்கம் ஆனந்தம் இன்னொரு பக்கம் பயம். பிள்ளையின் சிகிச்சை நடைபெறப் போகிறது என்ற ஆனந்தமும் வைத்திய செலவான 70 இலட்சம் ரூபாவை எப்படி சேர்ப்பேன் என்ற பயமும் தான்.
இறைவன் மீது தவக்குல் வைத்து சிகிச்சை மேற்கொள்ள உடன்பட்டோம். அல்ஹம்துலில்லாஹ்,விடயம் தெரிந்த பலர் எங்களுக்கு பிரார்த்தித்தும் முடியுமானவரை உதவியும் வருகின்றனர். இறைவன் நல்லுள்ளம் படைத்தோர் மூலம் நிச்சயம் உதவி செய்வான் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
என் நிலையை இப்பதிவின் ஊடாக சுருக்கமாக பகிர்ந்து கொண்டேன். என் மகளின் சிகிச்சை வெற்றிகரமாக அமைய இறைவனைப் பிரார்த்தித்து உங்கள் மேலான உதவிகளையும் எதிர்பார்க்கின்றேன்.
இப்படிக்கு
R.M.Seedh
No:233
Diwulgahamula
Paragahadeniya
Mobile / WhatsApp: 075 242 6089
Account No: 87645861
Bank of Ceylon
Paragahadeniya Branch

No comments:

Post a Comment

Pages