இரண்டாவது தடுப்பூசியை பெற்ற ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தல் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் - கல்வி அமைச்சர் - KALPITIYA VOICE - THE TRUTH

Sunday, September 5, 2021

இரண்டாவது தடுப்பூசியை பெற்ற ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தல் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் - கல்வி அமைச்சர்


அடுத்த வாரத்திற்குள், கோவிட் தொற்றுக்கு எதிரான இரண்டாவது தடுப்பூசியை செலுத்திக்கொண்ட பின்னர், ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தல் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன கேட்டுள்ளார்.


ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கான தடுப்பூசி இயக்கம், அடுத்த வாரத்தில் முடிவடைகிறது.

இந்தநிலையில் பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு தடுப்பூசியின் இரண்டாவது அளவு வழங்கப்பட்டுள்ளதாக தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

எனினும், சுகாதார அமைச்சின் பரிந்துரை கிடைக்கும் வரை, பாடசாலைகளை மீண்டும் திறக்க திடீர் முடிவை எடுக்க முடியாது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு முன், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்காக ஒரு விரிவானத் திட்டம் அவசியம்.
இதேவேளை இரண்டாவது, தடுப்பூசி அளவுக்கு பிறகு ஆசிரியர்கள், அதிபர்கள் தங்கள் செயல்பாடுகளை இணையத்தின் ஊடாக தொடரலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்

No comments:

Post a Comment

Pages