மாணவர்களை தடுப்பூசி பெற்றுக்கொள்ள தயார்ப்படுத்துமாறு சுகாதார அமைச்சு வேண்டுகோள்

 


பாடசாலை செல்லும் மாணவர்களை தடுப்பூசி பெற்றுக்கொள்ள தயார்ப்படுத்துமாறு சுகாதார அமைச்சு பெற்றோர்களுக்கு அறிவித்துள்ளது.

மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் திகதிகள் மற்றும் இடங்கள் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் 15 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை வழங்க ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய, 200க்கும் குறைந்த மாணவர்களை கொண்ட பாடசாலைகளை சுகாதார ஒழுங்கு விதிகளுக்கமைய இன்னும் இரண்டு வாரங்களில் திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு நேற்றுமுன் தினம் அறிவித்திருந்தது.

நாட்டில் 200க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட சுமார் 5,000 பாடசாலைகளை முதலில் திறப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments