கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் மருத்துவநிபுணர்கள் ஆலோசனை (விபரங்கள் உள்ளே) - KALPITIYA VOICE - THE TRUTH

Tuesday, September 7, 2021

கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் மருத்துவநிபுணர்கள் ஆலோசனை (விபரங்கள் உள்ளே)

 


கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் கடும் உடல்உழைப்பில் ஈடுபடக்கூடாது என்பதுடன் உடலை வருத்தும் செயற்பாடுகளை மேற்கொள்ளவோ அல்லது உடற்பயிற்சிகளை செய்யக்கூடாது என மருத்துவநிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

தொற்றுக்குள்ளானவர்கள் சில வாரங்கள் எச்சரிக்கையுடன் இருந்த பின்னரே மீண்டும் தங்கள் வழமையான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் எனவும் மருத்துவநிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பெருமளவானவர்கள் அல்பா அல்லது டெல்டா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதிலிருந்து மீண்டவர்கள் நீண்டகால பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும் என மருத்துவநிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அசாதாரண சோர்வு,கவனம் செலுத்துவதில் சிரமம், உடல்வலிகள் குறிப்பாக மூட்டுவலி ஆர்வமின்மை போன்ற அறிகுறிகளை தொற்றுக்குள்ளானவர்கள் வெளிப்படுத்துவார்கள் எனவும், இந்த அறிகுறிகள் மூன்று முதல் ஐந்துவாரத்திற்கு தொடரக்கூடும் என மருத்துவநிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதன் காரணமாக கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் உடலை வருத்தும் நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ளவேண்டும்,கடுமையான செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

அதேவேளை குருதிஉறைவு போன்றவை காரணமாக முழுமையாக படுக்கையில் ஓய்வில் இருக்கவேண்டியதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் நோயாளிகள் கொரோனாவிலிருந்து மீளும்போது அவர்களது நுரையீரல் இறுக்கமானதாகிவிடுகின்றதனால் சுவாசிப்பதில் பிரச்சினைகள் ஏற்படுகின்றதாகவும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment

Pages